தமிழகத்தில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்


டிசம்பர் 5 ஆம் தேதி, டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி,  இன்று, விவசாயிகளின் மகத்தான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க. சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், கருப்புக் கொடி ஏந்தி, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் தயாநிதி மாறன், சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சேலத்தில், மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில், “டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு பாராட்டையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திர  இந்தியாவில் இப்படி ஒரு விவசாய போராட்டம் நடைபெற்றதில்லை. விவசாயிகளை பற்றி கவலைப்படாமல் ஜனநாயகத்தை மதிக்காமல் மத்திய பாஜக அரசு உள்ளது” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Also Read  டாஸ்மாக் இன்று முதல் திறப்பு - கமல்ஹாசன் சொன்ன பஞ்ச் டயலாக்

தொடர்ந்து பேசிய அவர், “பெரும்பான்மை உள்ளது என்ற ஒரே காரணத்துக்காக விவசாய விரோத சட்டங்களை அரசு நிறைவேற்றி உள்ளது. வேளாண் சட்டத்துக்கு எதிராக மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மத்திய அமைச்சர்  ஒருவர் ராஜினாமா செய்தபோதாவது மத்திய அரசு விழித்து இருக்க வேண்டும். அவசர அவசரமாக வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.

விவசாயிகள் போராடுவது ஏழைத்தாயின் மகன் எனக்கூறும் மோடிக்கு தெரியாதா?. மத்திய பாஜக அரசுக்கு எதிராக விவசாயிகள் போர் தொடுத்து வருகிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக  மோடி கூறியிருந்தார். நாட்டில் ஆண்டுக்கு 10,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். பாஜக அரசின் வேளாண் சட்டங்களில் எங்காவது குறைந்தப்பட்ச ஆதார விலை என்ற வார்த்தை உள்ளதா?” என மத்திய அரசுக்கு பல கேள்விகளை எழுப்பினார்.

Also Read  சசிகலா வருகையால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி: வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் தேர்தல் பிரச்சார தேதி மாற்றம்!

மேலும் “விவசாயிகள் போராட்டத்தை எதிர்க்கட்சியினர் தூண்டிவிடுவதாக முதல்வர் கூறுகிறார். எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுவதாக டெல்லி சென்று விவசாயிகளிடம் முதல்வர் பழனிசாமி கூறமுடியுமா?” என கேள்வி எழுப்பினார்.

“சேலத்தில் திமுக போராட்டத்துக்கு தொண்டர்கள் வரக்கூடாது என பல்வேறு முயற்சிகளை செய்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்களை காவல்துறை மூலம் எடப்பாடி பழனிசாமி அரசு தடுத்துள்ளது.  போராட்டத்துக்கு வந்தவர்கள் தடுத்து மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

Also Read  சென்னையில் இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும் - வானிலை ஆய்வு மையம்

எடப்பாடி, கொங்கணாபுரம், சங்ககிரி, தாரமங்கலம், கொளத்தூர் ஆகிய இடங்களில் 25,000 திமுக தொண்டர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு  மண்டபங்களில் வைக்கப்பட்டுள்ள தொண்டர்களை பார்த்த பிறகே சென்னை செல்வேன். விவசாயிகள் போராட்டம் வெற்றி பெறக் கூடாது என அ.தி.மு.க செயல்படுகிறது. ஓரவஞ்சனையுடன் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா நிவாரண நிதி: நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நன்கொடை…!

sathya suganthi

பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் – அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint

அடுத்த அவைத்தலைவர் யார்.? : மதுசூதனனின் பதவிக்கு அதிமுகவில் மல்லுக்கட்டு.

mani maran

சென்னையில் 43 போலீஸ் நிலையங்களில் சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டனர்.

Tamil Mint

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்…!

Devaraj

தொடரும் அரசு பேருந்து ஊழியர்களின் வேலை நிறுத்தம்! இன்று மாலை முத்தரப்பு பேச்சுவார்த்தை!

Lekha Shree

திருமண நிகழ்ச்சிக்கு செல்வோருக்கு இ-பதிவில் புதிய கட்டுப்பாடுகள்…!

Lekha Shree

அக்டோபரில் தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல்… தேதிகள் அறிவிப்பு..!

Lekha Shree

தமிழகத்தில் மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா பாதிப்பு…!

Devaraj

“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை ஆவேசம்!

Lekha Shree

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை சீரழித்துள்ளது அதிமுக அரசு: பொள்ளாச்சி வழக்கில் மு.க. ஸ்டாலின் காட்டம்!

Tamil Mint

தமிழ் வழி கல்வி பயின்றோருக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: தமிழக அரசு அரசாணை வெளியீடு

suma lekha