ரஜினி இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அவரை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? – உதயநிதி ஸ்டாலின்


நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் வருகை அறிவிப்பால் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டதாக பா.ஜ.க., வைச் சேர்ந்த நடிகை குஷ்பு வெளியிட்ட கருத்துக்கு தி.மு.க இளைஞர் அணி செயலாளரும் நடிகருமான உதயநிதி பதிலளித்துள்ளார்.

மதுரை ஊமச்சிகுளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, “ஆண்டுதோறும் பொங்கல் பரிசு கொடுப்பது புதிது இல்லை. அதை தேர்தல் நேரத்தில் கொடுப்பதாக எதிர்கட்சிகள் விமர்சிப்பது சரியானது அல்ல” என கூறினார். மேலும் “திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ரஜினியை நேரடியாக விமர்சனம் செய்யலாமே. பாஜக படிப்படியாக மக்களின் நம்பிக்கையை பெற்று வருகிறது” எனவும் தெரிவித்தார்.

Also Read  சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் ஸ்டாலின் இன்று சந்திப்பு…!

இதையடுத்து இன்று கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், “என்னுடைய முதல் பிரச்சார பயணத்தில் நான் கைது செய்யப்பட்டேன். முதல் கட்ட பிரசாரத்தில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்து, அரங்கில் கூட்டம் நடத்துமாறு காவல் துறையினர் அறிவுறுத்தினர். ஆனால் தற்போது தமிழக முதலமைச்சர் பிரசாரம் தொடங்க வேண்டும் என்பதற்காகவே, கொரோனா தளர்வுகளை அரசு அறிவித்திருக்கிறது” என பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், “ரஜினி இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அவரை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? ரஜினிகாந்த் கலைஞரின் மிக நெருங்கிய நண்பர். தி.மு.க தலைவருடன் நட்பு பாராட்டக் கூடியவர். நாங்கள் அவரைப் பார்த்து ஏன் பயப்பட வேண்டும்” என கூறினார்.

Also Read  பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்: அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு சசிகலா மரியாதை..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா: கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை உள்பட 2 பள்ளிக்கு அபராதம்…!

Devaraj

அரசு ஊழியர்கள் முறைகேடாக சேர்த்த சொத்துகள் மட்டுமின்றி அவர்களின் ஒட்டுமொத்த சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை

Tamil Mint

சிறைத் துறைக்கு சசிகலா புதிய கோரிக்கை

Tamil Mint

மாரிதாஸ் Vs செந்தில் பாலாஜி White Board முதல் FootBoard வரை..!ட்விட்டரில் முற்றிய வார்த்தை போர்!

Lekha Shree

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பூட்டா சிங் மறைந்தார்

Tamil Mint

“பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்க வாய்ப்பே இல்லை!” – அமைச்சர் பாண்டியராஜன்

Shanmugapriya

“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

தமிழகம்: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை

Tamil Mint

வழக்கறிஞர்கள் போராட்டங்களில் பங்கேற்க நீதிமன்றம் நிபந்தனை

Tamil Mint

11,12ம் வகுப்பு பாடத்தொகுப்பு -டிடிவி தினகரன் எதிர்ப்பு

Tamil Mint

மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா மீரா மிதுன்.? : மருத்துவர் முன்னிலையில் வாக்குமூலம் பெற திட்டம்.!

mani maran

“சொன்னீங்களே செஞ்சீங்களா?” – அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம்..!

Lekha Shree