“தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும்” – டி.ஆர்.பாலு வலியுறுத்தல்..!


தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும் என திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பவில்லை என்றும் நீட் விலக்கு மசோதா நிறைவேறாமல் இருப்பதற்கு காரணம் ஆளுநர் தான் என்றும் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

முன்னதாக இன்று தமிழக சட்டப்பேரவை கூடியபோது ஆளுநர் உரையாற்றிய போது திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதையடுத்து விசிக எம்.எல்.ஏ சிந்தனைச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நீண்ட நாட்களாக ஆளுநர் மாளிகையில் தமிழக அரசின் நீட் தேர்வு ரத்து தொடர்பான கோப்பு கிடப்பில் உள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து ஆளுனர் உரைக்கு அல்ல ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்” என கூறினார்.

Also Read  திமுக வேட்பாளர்கள் பட்டியலில் பெண்களுக்கு 7%...!

இந்நிலையில், தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும் என திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டி.ஆர்.பாலு கூறுகையில், “நீட் விலக்கு மசோதா நிலுவையில் இருப்பதற்கு தமிழ்நாடு ஆளுநர் தான் காரணம்.

Also Read  பொங்கல் தொகுப்பில் ரொக்க பணம் ஏன் வழங்கவில்லை? முன்னாள் அமைச்சர் கேள்வி

அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டிய ஆளுநர் அதனை குழி தோண்டி புதைத்து கொண்டிருக்கிறார். அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசுக்கு ஆளுநர் அனுப்பி வைக்கவில்லை.

திமுக, விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சி எம்.பிக்கள் 3 முறை சென்றும் அமித்ஷாவை சந்திக்க முடியவில்லை.

Also Read  'சார்பட்டா பரம்பரை' படத்திற்கு உதயநிதி புகழாரம்… ஜெயக்குமார் எதிர்ப்பு…!

அரசியல் காரணத்திற்காக தமிழ்நாடு அமைச்சர்களை சந்திக்க மறுக்கிறார் அமித் ஷா. இது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு ஆளுநர் பதவி விலக வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் மூடப்படும் 2,000 அம்மா கிளினிக்குகள்…!

suma lekha

மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Tamil Mint

’ அதிமுக-பாஜக கூட்டணி சுமூகமாக செல்கிறது’ – மாநில தலைவர் அண்ணாமலை..!

suma lekha

சென்னையில் 161 நாட்களுக்கு பிறகு பேருந்து சேவை, கோவில்கள், பூங்காக்கள் திறப்பு

Tamil Mint

அமைச்சரவைக்குள் பூசல்? சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வர தாமதம்: பாதியில் வெளியேறிய சட்ட அமைச்சர்

sathya suganthi

நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து விழுந்த சம்பவம் – மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு!

Lekha Shree

கல்வி கட்டணம் செலுத்த வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை….

Devaraj

தேர்தலில் அதிக தொகுதிகள் வேண்டும்: திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் காங்கிரஸ்

Tamil Mint

என்ன சொல்லப் போகிறார் ரஜினி? உச்ச கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

Tamil Mint

“சீட் வேணுமா தம்பி”; நான் தண்ணி கேன் போட வந்தேன் சார் – வைரலாகும் கமலஹாசன் மீம்ஸ்!

Lekha Shree

தொடரும் அரசு பேருந்து ஊழியர்களின் வேலை நிறுத்தம்! இன்று மாலை முத்தரப்பு பேச்சுவார்த்தை!

Lekha Shree

தமிழகம்-கேரளா இடையே போக்குவரத்து 10 மாதங்களுக்கு மேலாக முடக்கம்… பொதுமக்களுக்கு கடும் அவதி!

Tamil Mint