a

எங்க கோட்டை மெட்ராஸூ…! அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மாஸ் காட்டிய திமுக!


நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது. திமுகவின் கோட்டையாக கருதப்படும் சென்னையில் உள்ள அனைத்து சட்டமன்றத்தொகுதிகளிலும் இம்முறை அக்கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமை 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

Also Read  ஜெயலலிதா இடத்தை நெருங்கும் கனிமொழி…! திமுகவால் முன்னிறுத்தப்படுவாரா…!

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் பாமக வேட்பாளர் கஸ்ஸாலியை 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சீமான் போட்டியிட்ட நிலையில், அந்த தொகுதியில் திமுக வேட்பாளர் கே.பி.சங்கர் வெற்றி பெற்றார். 48,597 வாக்குகள் பெற்று சீமான் தோல்வியடைந்தார்.

Also Read  21 தொகுதிகளில் அதிமுகவுக்கு ஆப்பு வைத்த அ.ம.மு.க…!

ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமாரை ஐரீம் மூர்த்தி 28 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து எம்எல்ஏவாகி உள்ளார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் மருத்துவர் எழிலன், சைதாப்பேட்டையில் மா.சுப்பிரமணியன், மயிலாப்பூரில் தா.வேலு வெற்றி பெற்றனர்.

இதே போல், மதுரவாயில், அம்பத்தூர், மாதவரம், ஆர்கேநகர், பெரம்பூர், வில்லிவாக்கம், திருவிகநகர், எழும்பூர், துறைமுகம், அண்ணாநகர் விருகம்பாக்கம், தியாகராயர்நகர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குற்றாலத்தில் குளிப்பதற்கு மீண்டும் தடை!!

Tamil Mint

ராஜ் பவனை சுழற்றி அடிக்கும் கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்ட தமிழக ஆளுநர்

Tamil Mint

பண்டிகை கால சிறப்பு ரயில் பட்டியல்

Tamil Mint

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

Tamil Mint

“தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

அரசியல் சண்டைகளை நீதிமன்றத்துக்கு கொண்டு வருவது ஏன்? – தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி

Tamil Mint

டெல்லியில் பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திக்க போகும் தமிழக ஆளுநர்

Tamil Mint

அண்ணா பல்கலை துணைவேந்தருக்கு அமைச்சர் எச்சரிக்கை

Tamil Mint

“ஆணவக் கொலையை தடுக்க தனி சட்டம்” – வெளியானது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

Shanmugapriya

தமிழகத்துக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்

Tamil Mint

சென்னையில் நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.. மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்

Ramya Tamil

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்…!

Devaraj