தமிழகத்தில் தொடங்கிய 3-ம் அலை? – என்ன இது அடுத்த சோதனை?


தற்போது உலகெங்கும் உள்ள ஒவ்வொரு மனிதனாலும் தினமும் இரண்டு முறையாவது சொல்லப்படும் ஒரு பெயர் கொரோனா.

இந்தக் கொடூர வைரஸ் தொற்றின் பரவலால் உலகமே முடங்கிப் போயுள்ளது. சீனாவில் தனது கொலைகார பயணத்தை தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் இதுவரை உலகெங்கிலும் 39,79,441 பேரை கொன்று குவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் முதல் அலையை கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு மத்திய மாநில அரசுகள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால் பொதுமக்களின் அஜாக்கிரதை காரணமாக கொரானாவின் இரண்டாம் அலை இந்தியாவில் மிக வேகமாக பரவியது. ஒரு திருத்தம் இந்த முறை கொரோனா ருத்ரதாண்டவம் ஆடியது.

ஒரு பக்கம் கொரோனா இரண்டாம் அலை மக்களைத் தாக்க மற்றொரு பக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு பல மக்கள் தங்கள் இன்னுயிர்களை இழந்தனர்.

இரண்டாம் அலையின் தீவிரத்தை உணர்ந்த மத்திய மாநில அரசுகள், ஆக்சிஜன் உற்பத்தியை போர்கால நடவடிக்கையில் பெருக்கி ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலையைக் கொண்டு வந்தனர்.

Also Read  ஈபிஎஸ் ராஜினாமா - மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து!

தடுப்பூசி போடும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுத்த போது தான் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.

அதன் காரணமாக மக்கள் பொதுக்கூட்டங்கள் கூட்டங்களில் புலங்கியதால் தமிழகத்தையே தள்ளாட வைத்தது கொரோனா.

கடந்த மே 7-ம் தேதி திமுக தமிழக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் முதல் கடமையாக கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டியது.

எந்தவித தளர்வுகளின்றி முழு பொது முடக்கத்தை அதிரடியாக அமல்படுத்தியது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை 24,88,407 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 32,818 பேர் இறந்துள்ளனர்.

நேற்று வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் அடிப்படையில் ஒரே நாளில் 4,230 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 97 பேர் உயிரிழந்துள்ளனர்.

Also Read  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் - பார்வையாளர்களுக்கு அனுமதி?

கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து வருவதாக இருந்தாலும் கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, திண்டுக்கல், விருதுநகர், விழுப்புரம், தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருவள்ளூர், திருப்பத்தூர், பெரம்பலூர், நீலகிரி, நாகை மாவட்டங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவல் குறைந்து வருவதால் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான அளவுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

தளர்வுகள் இல்லாத கடும் கட்டுப்பாடுகள் இருக்கும் போதே மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் கொரோனாவின் பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது.

தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கொரோனா மூன்றாம் அலை தொடங்க இது அச்சாணி போட்டு விடும் என மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.

மேலும், பெரிய நகரங்களுக்கு கொடுக்கப்படும் பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல், மருத்துவ முக்கியத்துவம் சிறிய நகரங்களுக்கு சரியான முறையில் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

Also Read  "பிரதமர் மோடியின் பிம்பத்தை தவறாக காட்ட டூல்கிட் உருவாக்கிய காங்கிரஸ்!" - பாஜகவினர் பரபரப்பு குற்றச்சாட்டு!

தற்போதைய கொரோனா அதிகரித்துள்ள மாவட்டங்களில் சுகாதார கண்காணிப்பை தீவிரப்படுத்தி, விதி முறைகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் பதிவிட்டுள்ள ஒரு ட்வீட் கவனிக்கப்பட வேண்டியது.

அந்த பதிவில், “தமிழகத்தில் ஒரே நாளில் 97 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக தமிழ்நாடு அரசின் மருத்துவ அறிக்கை கூறுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 30 பேர் இறந்துள்ளனர். அதாவது மூன்றில் ஒரு பங்கு இந்த ஒரு மாவட்டத்தில் நேர்ந்திருக்கிறது. ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு நடவடிக்கைகள் ஒருபுறம் கை கொடுத்தாலும் மக்களும் கொடுத்தால் கை தான் கொரோனாவை வீழ்த்த முடியும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முதலமைச்சராக மு.க.ஸ்டாலினின் முதல் சைக்கிள் பயணம் – செல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்…!

sathya suganthi

“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனிதநேயமற்றவர்”: கே.பி.ராமலிங்கம்

Tamil Mint

இன்றுடன் நிறைவு பெறுமா அதிமுக தொகுதி பங்கீடு இழுபறிகள் – இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் தமாகா, தேமுதிக!

Lekha Shree

தமிழகம்: மயிலாடுதுறை தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உருவாகவுள்ளது

Tamil Mint

திமுகவின் ஐபேக் டீமுக்கு போட்டியாக அதிமுகவில் களமிறங்கிய SMS டீம்!

Tamil Mint

தமிழகத்தில் ஜனவரி 31-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்… 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருத்து!

Tamil Mint

சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு.! இல்லத்தரசிகள் தலையில் இடியை போட்ட அறிவிப்பு!

Lekha Shree

தமிழகத்தில் பார்களை திறக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை

Tamil Mint

முதல்வருக்கு வந்த கொரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா?

Tamil Mint

அம்மா – அப்பா எல்லாம் இல்லை… ஜெயலலிதா மோடிக்கு புதிய உறவுமுறை கொடுத்த சி.டி.ரவி!

Devaraj

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதியின் பெயரை சூட்ட கோரிய வழக்கு தள்ளுபடி

Tamil Mint

கொரோனா மருத்துவமனையில் சூப்பர் நூலகம்

Tamil Mint