“என்னை ‘தல’ என குறிப்பிட வேண்டாம்!” – நடிகர் அஜித்குமார்


சினிமாவில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த ஹீரோக்களை பட்டப்பெயர் வைத்து அன்பாக அழைப்பது வழக்கம்.

அந்தவகையில் ரஜினியை ‘சூப்பர்ஸ்டார்’ என்றும் கமலை ‘உலகநாயகன்’ என்றும் விஜய்யை ‘தளபதி’ என்றும் அஜித்தை ‘தல’ என்றும் இதுநாள் வரையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை ‘தல’ என அழைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சமூக வலைத்தளங்களில் அஜித்தின் ரசிகர்கள், “தல என்றால் ஒரே தல தான். அது அஜித் தான்” என்றெல்லாம் பதிவிட்டு தங்களின் கண்டங்களை தெரிவித்து வந்தனர்.

Also Read  'குக் வித் கோமாளி' அஸ்வினின் ஆல்பம் பாடலை பாடிய சிவாங்கி…! ரசிகர்கள் உற்சாகம்..!

இந்நிலையில், இன்று அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனிவரும் காலங்களில் என்னை பற்றி எழுதும்போது என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போது என் இயற்பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏகே என்று குறிப்பிட்டால் போதுமானது.

தல என்று வேறு ஏதாவது பட்டப் பெயர்களை குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.

Also Read  ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்துகொண்ட பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப்?

உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மனஅமைதி, மனநிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன். அன்புடன் அஜித்குமார்” என கூறியுள்ளார்.

இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவ்வளவு வருடங்கள் ‘தல’ என அன்போடு அவரை குறிப்பிட்டு வந்த ரசிகர்கள் இந்த அறிக்கையால் வருத்தத்தில் உள்ளனர்.

Also Read  அஜித்தின் 'வலிமை' First Single இன்று வெளியீடு…! நேரம் குறித்த அப்டேட் இதோ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திரைப்படமாகும் ’தங்கமகன்’ நீரஜ் சோப்ராவின் வாழ்க்கை… ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

suma lekha

அது மட்டும் பண்ண மாட்டேன்: சாரி சொல்லும் சாய் பல்லவி

Tamil Mint

ஒரே நாளில் வெளியாகும் விஜய் சேதுபதி-சிவகார்த்திகேயன் படங்கள்? ரசிகர்களுக்கு செம ட்ரீட்..!

Lekha Shree

வடிவேலு நடிக்க இருந்த கதையில் நடிக்கும் விஜய் சேதுபதி..! வெளியான சுவாரசிய அப்டேட்..!

Lekha Shree

மாஸ்டரை பின்னுக்கு தள்ளி வலிமையின் புதிய சாதனை

suma lekha

ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்.!

suma lekha

“மற்ற படங்கள் குறித்த பதிவுகளை குறைக்க வேண்டும்!” – நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் கோரிக்கை..!

Lekha Shree

‘கண்டா வர சொல்லுங்க’ பாட்டியின் சோகம் நிறைந்த வாழ்க்கை… உதவி கேட்டு கண்ணீர் வடிக்கும் பரிதாபம்..!

Lekha Shree

கையில் கட்டுடன் வந்த மாகாபா ஆனந்த்… விரைவில் குணமடைய பிரபலங்கள் வாழ்த்து.. என்ன நடந்தது?

suma lekha

அயலான் படம் குறித்த சூப்பர் அப்டேட்! படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் இதோ!

Bhuvaneshwari Velmurugan

குக் வித் கோமாளி கனியை கலாய்த்த ஏ.ஆர்.ரகுமான்! – என்ன சொன்னார் தெரியுமா?

Shanmugapriya

அருண் விஜய்யின் ‘யானை’ படத்தில் நடிக்கும் ‘குக் வித் கோமாளி’ புகழ்..!

Lekha Shree