“வேண்டுமென்றே சர்ச்சையை உருவாக்கக்கூடாது!”- சூர்யாவுக்கு ஆதரவாக கடம்பூர் ராஜூ பேச்சு..!


ஜெய் பீம் திரைப்பட சர்ச்சை முடிந்து போன விஷயம், மீண்டும் பிரச்சனையை உருவாக்கி சமூகத்தில் ஒரு சர்ச்சையை உருவாக்கும் விதமாக நாம் செயல்படக் கூடாது என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில் : திரைப்படங்களில் சர்ச்சைக்குரிய காட்சி வருவது அதை நீக்குவது என்பது சகஜமான ஒன்று. அதிமுக ஆட்சியின்போது அக்கா திரைப்படத்தில் சில ஆட்சேபகரமான காட்சிகள் இருந்தன.

Also Read  நடிகர் சூர்யாவை கவர்ந்த பாடல் ட்விட்டர் பக்கத்தில் புகழாரம்...

அந்தப் படக் குழுவினரை அழைத்து பேசியதை தொடர்ந்து அந்த காட்சிகள் நீக்கப்பட்டன. அதேபோன்று ஜெய்பீம் படத்தில்  ஆட்சேபகரமான காட்சிகளில் சில குறியீடுகள் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் மாற்றப்பட்டு விடப்படுவதாக  நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். எனவே இப்பிரச்சனையை முடிந்து போனதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் மீண்டும் மீண்டும் பிரச்சனையை உருவாக்கி சமூகத்தில் ஒரு சர்ச்சையை உருவாக்கும் விதமாக நாம் செயல்படக் கூடாது. கருத்தினை தெரிவிப்பது நமது உரிமை – அந்த உரிமைக்கு அவர்கள் செய்து கொடுத்து இருக்கிறார்கள். இனிமேல் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று அவர்கள் கூறியுள்ளனர். எனவே மேலும் சர்ச்சைக்குள்ளாகி வேண்டிய விஷயம் அல்ல என்று கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Also Read  சூர்யாவின் 'ஜெய் பீம்' பட விவகாரம்: ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு வன்னியர் சங்க மாநில தலைவர் நோட்டீஸ்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“படிக்காமல் ஏன் பார்வோர்ட் செய்தீர்கள்?” – நடிகர் எஸ்.வி.சேகரிடம் நீதிபதி சரமாரி கேள்வி..!

Lekha Shree

‘இந்த’ பிரபல நடிகையின் தயாரிப்பில் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ள சமந்தா?

Lekha Shree

கே.ஜி.எஃப் 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

suma lekha

மின் கட்டணம் செலுத்த இரண்டு மாதத்திற்கு விலக்கு வேண்டும் – சீமான்

Shanmugapriya

வடிவேலுக்கு ரெட் கார்டு கொடுத்ததே தெரியாதா?… சரத்குமாரை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்..!

suma lekha

“நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கனும்?” – ‘வைகைப்புயல்’ வடிவேலு

Lekha Shree

”எனக்கு ரூ.10 கோடி வரை தருவதாக சொன்னார்கள்”- சினேகன் கூறிய அதிர்ச்சி தகவல்!

HariHara Suthan

பிரபல இயக்குனர் மற்றும் அவரது மனைவிக்கு கோவிட் பாசிட்டிவ்..

Ramya Tamil

நடன இயக்குனர் சிவசங்கரின் சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்க முன்வந்த நடிகர் சோனு சூட்..!

Lekha Shree

“சர்வாதிகாரம் தான் தீர்வு!” – வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து கங்கனா காட்டம்..!

Lekha Shree

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் செல்போனில் ஆபாச வீடியோக்கள்…! வெளியான பகீர் தகவல்கள்…!

sathya suganthi

தனுஷின் புதிய சாதனை! – கொண்டாடும் ரசிகர்கள்…!

Lekha Shree