இந்த நேரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆவேசம்


பேரிடர் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வட கிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் இன்னும் சில நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு இந்த பேரிடர் காலத்தை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

Also Read  தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது எப்போது? அமைச்சர் பதில்

இந்நிலையில் இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது,43 மணி நேரத்தில் 13 செ.மீ மழை பெய்துள்ளது.

இது வட கிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகரித்து வருகிறது என்றும் கால்வாய் தூர்வாரும் பணிகள் கடந்த மாதம் நடந்த போது முதல்வர் நேரில் ஆய்வு நடத்தினார் என தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னையில் மண்டலத்திற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது கூட தெரியாமல் எதிர்கட்சித் தலைவர் பேசியிருப்பது தேவையற்றது. ஒரு பேரிடர் காலம், இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து 108 சேவைக்காக, 230 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் உள்ளன என்றும் சுகாதார பாதிப்புகளை எதிர்கொள்ள ரூ.120 கோடி செலவிலான மருந்துகள் கையிருப்பில் உள்ளது எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Also Read  புலியை சுட்டு கொல்லும் உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு..! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #SaveT23 …!

காஜா புயல் ஓய்ந்த பிறகு மக்களை போய் பார்க்கும் முதல்வர், எங்கள் முதல்வர் இல்லை என்றும் மழை பெய்யும்பொழுதே பேரிடர் நேரத்தில் களத்தில் மக்களோடு நிற்கிறவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னையில் 108 சேவைக்கு இன்று மட்டும் 408 அழைப்புகள் வந்துள்ளன என்றும் மாநகராட்சி சார்பில் சென்னையில் 200 பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.

Also Read  தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி

Tamil Mint

பண்டிகை கால சிறப்பு ரயில் பட்டியல்

Tamil Mint

“எனக்கு ஆண்மை இல்லை!” – வாக்குமூலம் அளித்த சிவசங்கர் பாபா?

Lekha Shree

வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறப்பு – 50 நாட்களுக்கு பின் பக்தர்களுக்கு அனுமதி

sathya suganthi

16 நாட்களில் 51.81% உயர்ந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை…! அச்சத்தில் தமிழக அரசு…!

Devaraj

மத்திய குழுவினர் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆய்வு

Tamil Mint

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு..!

Lekha Shree

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சென்னையில் தொலைக்காட்சி பத்திரிகையாளர் கைது

Tamil Mint

ஜனவரி 27-ம் தேதி விடுதலையாகிறார் சசிகலா; உறுதிப்படுத்திய ராஜா செந்தூர் பாண்டியன்

Tamil Mint

சூடுபிடிக்கும் தூத்துக்குடி இளைஞர் கொலை வழக்கு

Tamil Mint

“சின்னம்மா குறித்து ஓபிஎஸ் சரியாகத்தான் பேசியிருக்கிறார்” – டிடிவி தினகரன்

Lekha Shree

’4 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு’ – வானிலை ஆய்வு மையம் தகவல்..!

suma lekha