கரூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..! மருத்துவர் ரஜினிகாந்த் போக்சோவில் கைது..!


கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மருத்துவர் ரஜினிகாந்தை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்

கரூரில் பிரபல எலும்பு முறிவு சிறப்பு மருத்துவமனை ஒன்றில் மருத்துவர் ரஜனிகாந்த் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவராக பணியாற்றியுள்ளார்.

இந்த மருத்துவமனையில் 40 வயதான பெண் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக காசாளராக பணியாற்றி வந்துள்ளார். அந்தப் பெண் காசாளர் மருத்துவமனையில் கடன் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக தீபாவளி போனஸ் மற்றும் மாத சம்பளம் போன்றவற்றை மருத்துவமனை நிர்வாகம் கொடுக்கவில்லையாம்.

Also Read  மீண்டும் அதிகரித்த கொரோனா உயிரிழப்புகள்! - ஒரேநாளில் 468 பேர் பலி!

இதனால், அந்த பெண் காசாளர் பணியில் இருந்து நின்றுவிட்டார். அந்த பெண் காசாளரின் இரண்டாவது மகள் கரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் பள்ளி முடிந்ததும் மருத்துவமனைக்குச் சென்று தனது தாயுடன் வீட்டிற்கு வருவது வழக்கமாம். அப்படி அங்கு சென்று வருவதில் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் மாணவிக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி மாலை மருத்துவமனை மேலாளர் சரவணன் என்பவர் மாணவியின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், ” தீபாவளிக்கு அம்மாவிற்கு சம்பளம், போனஸ் தரவில்லை. அதனால் மருத்துவமனைக்கு நீ மட்டும் வந்து வாங்கிக்கொள்” என கூறியுள்ளார்.

அந்த மாணவி மருத்துவமனைக்கு தனியாக சென்று மருத்துவர் ரஜினிகாந்த் அறைக்கு சென்று அவரை சந்தித்துள்ளார். அப்போது அங்கு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Also Read  மக்கள் நீதி மய்யம் கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்தது ஏன்..? கமல்ஹாசன் ஆலோசனை..

இதனால் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்த மாணவி மருத்துவமனையில் நடந்தது குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் மருத்துவர்கள் மற்றும் அவரது மேலாளர் சரவணன் ஆகியோர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை தேடி வந்துள்ளனர்.

Also Read  "ஏப்ரல் 6ம் தேதி ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு" - தொழிலாளர் ஆணையம்

அதில் தலைமறைவாக இருந்த மேலாளர் சரவணனை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். இன்று தலைமறைவாக இருந்த மருத்துவர் ரஜினிகாந்தை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கே.டி.ராகவனின் வீடியோவை வெளியிட்ட யூடியூபர் மதனை தேடும் நெட்டிசன்கள்..! என்ன காரணம்?

Lekha Shree

“இலங்கையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள்சுமார் 10 பேர் தமிழகத்தில் பதுங்கல்”

Tamil Mint

மகள் கண்முன்னே தந்தையை வெட்டிய நபர்… தென்காசியில் பரபரப்பு சம்பவம்..!

Lekha Shree

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணியின் முன்னுரிமை : முதல்வர் அறிவுறுத்தல்

suma lekha

ஸ்டாலினை எதிர்க்கும், ஜெயலலிதாவின் அன்பைப் பெற்ற திருநங்கை…!

Lekha Shree

கலால் வரி குறைப்பு எதிரொலி – சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு..!

Lekha Shree

தமிழ்நாட்டில் 5 கூடுதல் விமான நிலையங்கள்… மத்திய அரசு நிதி ஒதுக்கீடு!

Tamil Mint

நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.. கனிமொழி பேட்டி..

Ramya Tamil

யார் இந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ்? பண மோசடி வழக்கில் கைதானவர்களின் பின்னணி என்ன?

Lekha Shree

இன்று தொடங்கியது சென்னை புத்தக கண்காட்சி – உற்சாகத்தில் புத்தக பிரியர்கள்!

Jaya Thilagan

பிபிசியின் ‘100 பெண்கள் 2020’ பட்டியலில் ‘தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக்குழுவின் இசைவாணி இடம்பிடித்துள்ளார்

Tamil Mint

பேய்க்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட போலீஸ்காரர்… கடலூரில் நடந்த விநோதம்…

Lekha Shree