நோயாளிகளின் கலீரலில் தனது இனிஷியலை பொறித்த மருத்துவர்..! ஏன் தெரியுமா?


ஆபரேஷன் செய்த போது நோயாளிகளின் கல்லீரலில் மருத்துவர் ஒருவர் தனது இணிஷியலை பொறித்துள்ளது மருத்துவத் துறையினர் இடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் கல்லீரல் பிரிவில் 12 ஆண்டுகளாக மருத்துவராக பணியாற்றி வந்தவர் பிரம்ஹால் (57).

கடந்த 2013ஆம் ஆண்டு அதே மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்த இவர் அந்த நோயாளியின் கல்லீரலில் இனிசியல் பொறிக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து, அதனை போட்டோவாக எடுத்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.

அப்போது விசாரணையில் பிரம்ஹால் தான் இந்த வேலையை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.

Also Read  மகுடத்தை பறித்த திருமதி உலக அழகி…! ஒரு வாரத்துக்கு பின் எடுத்த அதிர்ச்சி முடிவு…!

இதையடுத்து அவரிடம் விசாரித்ததில் இதுபோல மேலும் ஒரு நோயாளிக்கு செய்து இருப்பதாக ஒப்புக் கொண்டவர் Argon Beam Machine எனப்படும் நவீன இயந்திரத்தை பயன்படுத்தி தனது இணிஷியலை நோயாளிகளின் கல்லீரலில் பொறித்ததாகவும் இதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் நீண்ட நேரம் நடக்கும் ஆபரேஷனின் போது மனதை ஆசுவாசப்படுத்திக் கொள்ள இவ்வாறு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Also Read  ஒமைக்ரான் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு…! கொரோனாவின் புதிய திரிபால் ஏற்பட்டுள்ள முதல் மரணம்..!

இதனை அடுத்து 2014 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் அவர் மீது மருத்துவமனை நிர்வாகம் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கை விசாரித்து வந்த மருத்துவ தீர்ப்பாயம் கடந்த 2018 ஆம் ஆண்டு பிறந்து 5 மாதங்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

இத்துடன் 10,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது. இருப்பினும் இந்த தண்டனை போதாது என கருதிய மருத்துவ கவுன்சில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மருத்துவர் அளிக்கப்பட்ட தண்டனை போதாது என கூறியதுடன் அவரின் மருத்துவ அங்கீகாரத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

Also Read  யூரோ கால்பந்தாட்ட இறுதி போட்டி… வெற்றியாளரை கணித்த புலி..!

இந்த சம்பவத்தால் உடல்ரீதியான பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை எனினும் ஒரு நோயாளி தான் மனரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவத் துறை மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை கெடுப்பதாக உள்ளதால் மருத்துவத்துறையில் இனியும் நீடிக்க கூடாது என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

36 வயது பெண்ணின் உடலில் 32 வகை கொரோனா! வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree

3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கும் சீன அரசு..!

Lekha Shree

சீனாவில் வைரஸை தடுக்க பன்றிகளுக்கு 13 மாடி கட்டடத்தில் பலத்த பாதுகாப்பு.!

suma lekha

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு ரஷ்ய அதிபர் புதின் புத்தாண்டு வாழ்த்து

Tamil Mint

“ஒடுக்க நினைத்தால் தலை அடித்து நொறுக்கப்படும்” – அமெரிக்காவை எச்சரித்தாரா ஜின்பிங்?

Lekha Shree

Comedy Wildlife Photography 2021: வைரலாகும் சில நகைச்சுவை வனவிலங்கு புகைப்படங்கள்..!

Lekha Shree

அர்ணாப் கோஸ்சுவாமி கைதை கண்டித்து பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் எழுப்பி வருகின்றனர்

Tamil Mint

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் – மெலிண்டா தம்பதி சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்

suma lekha

ஹோலி வாழ்த்து சொன்ன அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்…!

Devaraj

யூடியூப்பர்களுக்கு வந்த சோதனை – வரி கட்ட சொல்லி கூகுள் போட்ட அதிரடி உத்தரவு

Devaraj

தொலைக்காட்சி தொடர்களில் பெண்கள் நடிக்கத் தடை!!! தலிபான்கள் அறிவிப்பால் சர்ச்சை…

Lekha Shree

29 நாடுகளுக்கு பரவிய ‘லாம்ப்டா’ வேரியண்ட்! எந்தளவிற்கு ஆபத்து?

Lekha Shree