a

கொரோனா தடுப்பூசி மீது தவறில்லை; மருத்துவர்கள் விளக்கம்


நடிகர் விவேக் மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என மருத்துவர்கள் மீண்டும் விளக்கம் அளித்துள்ளனர். அடிக்கடி உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸ் கிருமியை எதிர்த்துப் போராட தடுப்பூசி தான் சிறந்த ஆயுதம் என்றும் தெரிவித்துள்ளனர்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகர் விவேக், அதற்கு அடுத்தநாளே மாரடைப்பால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மிகவும் அபாயகரமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Also Read  திமுக வின் 'விடியும் வா' திட்டத்தின் கீழ் 1 லட்சம் கடிதங்கள் அனுப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு, தடுப்பூசி மீதான அச்சத்தை மக்களுக்கு ஏற்படுத்தியது. எந்தவித உடல்நல பாதிப்பும் இல்லாத நடிகர் விவேக், தடுப்பூசி செலுத்திய இரண்டே நாட்களில் மரணித்தது ஏன்? என அனைத்து தரப்பு மக்களும் கேள்வி எழுப்பினர். இதற்கு மருத்துவர்கள் தொடர்ந்து விளக்கம் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விவேக்கிற்கு சிகிச்சை அளித்த சிம்ஸ் மருத்துவமனை துணைத் தலைவர் மருத்துவர் ராஜூ அளித்துள்ள விளக்கத்தில், நடிகர் விவேக்கிற்கு வீட்டிலேயே மாரடைப்பு ஏற்பட்டு விட்டது. அதன் பின்னர் சுமார் 20 நிமிடங்கள் கழித்தே மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவரது நாடித் துடிப்பு மிகக் குறைவாக இருந்தது.

Also Read  பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தடை செய்யப்பட்டது எதற்காக? பரபரப்பு பின்னணி

அவருக்கு, உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன், சிகிச்சை அளித்தோம். அப்போது, இதய ரத்த நாளங்களில், 100% அடைப்பு இருந்தது. உடனடியாக, ஆஞ்சியோ பிளாஸ்டி வாயிலாக, அடைப்பை அகற்றி, ‘ஸ்டென்ட்’ பொருத்தப்பட்டது. அவரை மீட்டு வர பல்வேறு மருத்துவ முறைகளை கையாண்டோம். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மரணித்தார். அவரது மரணத்திற்கும், தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக அமைச்சரவையில் டெல்டா மாவட்டத்தினருக்கு வாய்ப்பு இல்லை…!

Lekha Shree

இன்றிரவு 10 மணிக்கு தொடங்குது இரவு நேர ஊரடங்கு

Devaraj

சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

Tamil Mint

ஜெயலலிதா இல்லத்தை விட பிரமாண்டமான் பங்களாவை போயஸ் தோட்டத்தில் கட்டும் சசிகலா

Tamil Mint

ஸ்டெர்லைட்டுக்கு 4 மாதத்திற்கு அனுமதி – அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

Devaraj

குணமடைந்து வரும் எஸ்பிபி: பாட, எழுத முயற்சிக்கிறார்

Tamil Mint

ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய மாற்றம்

Tamil Mint

இந்த நம்பர் இருந்தா போதும்… தேர்தல் பற்றிய புகார்கள் தெரிவிக்க…

Jaya Thilagan

பாமாயில் விலை குறையப் போகிறதா?

Tamil Mint

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

Tamil Mint

பாஜகவுக்கு தாவுகிறாரா குஷ்பு? கடுப்பில் காங்கிரஸ்

Tamil Mint

பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவு எடுக்கலாம்: சி.பி.ஐ

Tamil Mint