a

சென்னை சூப்பர் கிங்சுக்கு மற்றும் ஒரு வாய்ப்பு – சென்னையை சமாளிக்குமா ஐதராபாத்?


ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதுகிறது.

டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் முதல்முறையாக இரு அணிகளும் இன்று இரவு பலப்பரீட்சை நடத்துகின்றன.

தொடக்க ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல் அணியிடம் தோல்வி கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அதன் பிறகு வெற்றி நடை போட்டு வருகிறது.

ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 4 வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

Also Read  ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு ஒரு நல்ல செய்தி!

தொடக்க ஆட்டக்காரர்கள் டு பிலெஸிஸ், கெய்க்வாட், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி என பேட்டிங்கில் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது.

ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து கலக்கி கொண்டு வருகிறார்.

பேட்டிங் பவுலிங்கில் துருப்பு சீட்டாக உள்ள ஜடேஜா இந்த முறையும் அதிரடி காட்ட காத்திருக்கிறார்.

பந்துவீச்சில் இம்ரான் தாஹிர் தீபக் சஹர், சாம் கரண் ஆகியோர் எதிரணிக்கு நெருக்கடி அளித்து வருகின்றனர்.

Also Read  கடின உழைப்பால் மீண்டெழுந்தேன் - சொல்கிறார் பிரித்வி ஷா!

தொடர் வெற்றிகளை குவித்து வரும் சென்னை அணி ஐதராபாத்தை மிக எளிதாக வெல்லும் முனைப்பில்லேயே களம் இறங்கும்.

அதேசமயம் ஐதராபாத் அணி 5 போட்டிகளில் விளையாடி 4 தோல்விகளையும் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே கண்டுள்ளது.

கடைசியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் விளையாடி சூப்பர் ஓவர் வரை சென்ற ஐதராபாத் அணி கடைசி கட்டத்தில் வெற்றியை நழுவ விட்டது.

Also Read  கடைசி நேரத்தில் ஐதராபாத் அணியின் வெற்றியை பறித்துக்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்!

டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன் என பேட்டிங்கில் பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்தாலும் போட்டியை முடிக்க முடியாமல் அந்த அணி திணறுவது வாடிக்கையாக உள்ளது.

தவறை சரிசெய்து பலம் வாய்ந்த சென்னை அணியை சமாளிப்பது ஐதராபாத் அணிக்கு கடும் சவாலாகவே இருக்கும். இரு அணிகளும் போட்டியை வெல்லும் முனைப்பில் களம் இறங்குவதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்றே நமபலாம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சொந்த ஏற்பாட்டில் ஆஸ்திரேலியா வாருங்கள் – ஐபிஎல் வீரர்களுக்கு ஆஸி., பிரதமர் அட்வைஸ்

Lekha Shree

PM cares மீது நம்பகத்தன்மை இல்லை! – கொரோனா நிதியை வேறுவிதமாக இந்தியாவுக்கு அனுப்பிய பேட் கம்மின்ஸ்!

Lekha Shree

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை சமாளிக்குமா சன்ரைசர்ஸ் ஹைதராபாத்?

Lekha Shree

ஆர்.சி.பி உடையில் கலக்கிய உசைன் போல்ட்!

Jaya Thilagan

சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் போட்டியில் நிகழ்ந்த முக்கிய துளிகள்!

Jaya Thilagan

பொலந்து கட்டிய மேக்ஸ்வெல் – டி வில்லியர்ஸ்!

Devaraj

ஐதராபாத்துக்கு ஹாட்ரிக் தோல்வி – புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ்

Devaraj

ஆடுகளத்தில் ‘தல’ தோனியை மிரட்டிய சிஎஸ்கே இளம் வீரர்!

Lekha Shree

சென்னையை சமாளிக்குமா ராஜஸ்தான்?

Jaya Thilagan

மேக்ஸ்வெல் – டி வில்லியர்ஸ் அதிரடியால் பெங்களூரு அணி வெற்றி!

Devaraj

சன் ரைசர்ஸ் அணியை மிரட்டிய டிஆர்எஸ் எம்.எல்.ஏ..! காரணம் இதுதான்!

Jaya Thilagan

டிஸ்சார்ஜ் ஆனார் முத்தையா முரளிதரன்!

Devaraj