a

“ திமுக தொண்டர்கள் இதுபோன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளை செய்யக்கூடாது..” கண்டித்த ஸ்டாலின்


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 159 இடங்களில் அமோக வெற்றி பெற்றதன் மூலம், திமுக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க உள்ளது. தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலினுக்கு வரும் 7-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதற்காக அக்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், ஸ்டாலின் வெற்றி பெற்றதற்காக ராமநாதபுரத்தை சேர்ந்த வனிதா (32) என்ற பெண் தனது நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளார்.. பரமக்குடி அருகே உள்ள பொதுவகுடியைச் சேர்ந்த அந்த பெண், தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வரரானால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக வேண்டியுள்ளார்.

அதன்படி நேற்று பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலில் முன்பு தனது நாக்கினை கத்தியால் அறுத்து தனது நேர்த்திக் கடனை நிறைவேற்றியுள்ளார்..

Also Read  நாங்கள் மிட்டாய் கொடுக்கிறோம் என்றால் நீங்கள் என்ன அல்வா கொடுக்கிறீர்களா? - ஸ்டாலின் காட்டம்!

கொரோனா ஊரடங்கு காரணமாக கோயில் திறக்கப்படாத தனது நாக்கினை வாசல்படியில் வைத்துவிட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், அந்த பெண்ணை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஸ்டாலின் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்..

Also Read  விஜய் சைக்கிளில் செல்ல இதுதான் காரணம்! அவரது குழுவினர் சொன்ன தகவல் இதோ!

அதில் “ ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வனிதா என்ற திமுக தொண்டர், நடந்து முடிந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றதால் தன் நாக்கை அறுத்துக் கொண்டு காணிக்கை செலுத்துவதாக கோயில் வேண்டிக் கொண்டதுடன், அதை நிறைவேற்றியதாகவும் செய்தித்தாள்களில் படித்து நடுக்கமுற்றேன்..

தமிழக மக்கள் ஒரு துளி ரத்தம் கூட சிந்தாமல் மகிழ்ச்சியாகவும், மன நிறைவுடனும் செழிப்பாக வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் இந்த தேர்தலில் வாக்குறுதிகளை முன் வைத்தோம்.

நாம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சகோதரி ஒருவர் தன் நாக்கை இழந்திருப்பதை பற்றிக் கேள்விப்படும் போது விழிகள் குளமாகின்றன.. ஏழை எளிய மக்களுக்கு நற்பணி ஆற்றுவதை உங்களுடைய காணிக்கையாக வைத்துக் கொள்ளுங்கள்.. உங்கள் உடலை ஒருபோதும் வெற்றிக்காக சிதைத்து கொள்ள வேண்டாம்..

இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என்னையே சிதைப்பதாக எண்ணி எனக்கு மனக்காயம் உண்டாகும்.. திமுக தொண்டர்கள் இதுபோன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளை செய்யக்கூடாது என்று கண்டிப்புடன் கேட்டுக் கொள்கிறேன்..

Also Read  தமிழக சட்டப்பேரவை தேர்தல்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

வனிதா என்ற சகோதரி விரைவில் உடல்நலம் பெற்று இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன்..” என்று தெரிவித்துள்ளார்..


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதியின் பெயரை சூட்ட கோரிய வழக்கு தள்ளுபடி

Tamil Mint

மீனவரை கொடூரமாக கொன்ற முதலை; காவிரி ஆற்றில் உலா வருவதால் மக்கள் பீதி!

Tamil Mint

தமிழகத்தின் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு…! அவையில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு…!

sathya suganthi

கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் லாக் டவுனை நீக்கிய அரசு, சரியான முடிவு தானா?

Tamil Mint

பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராசுவுக்கு கொரோனா

Tamil Mint

தமிழகத்தில் இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு ஜனவரி 4 தொடக்கம்

Tamil Mint

ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த திமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள்

sathya suganthi

புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது திரைப்பட விழா!!

Tamil Mint

முன்னாள் நீதிபதி ஏ ஆர் லட்சுமணன் காலமானார்

Tamil Mint

“உதயநிதி பற்றி பேசினால் ஸ்டாலினுக்கு ரத்தகொதிப்பு அதிகமாகிறது” – அமித்ஷா

Shanmugapriya

‘என் உடம்பில் கடைசி மூச்சு இருக்கும் வரை பாஜகவை எதிர்ப்பேன்’ – ப.சிதம்பரம்

Shanmugapriya

ஒவ்வொரு வீட்டினருக்கும் ஹெலிகாப்டர்!! சுயேட்சை வேட்பாளரின் பிரம்மாண்ட வாக்குறுதிகள்..

HariHara Suthan