a

Double Mask அணிவதால் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்கலாமா…!


கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உரிய மருந்து கிடைக்காமல் உலகம் நாடுகள் திணறி வரும் நிலையில், வரும் முன் காப்பது மட்டுமே சிறந்த வழியாக கருதப்படுகிறது.

முழுவதுமாக கொரோனாவை தடுக்கும் ஆற்றல் முகக்கவசங்களுக்கு இல்லை என் போதிலும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு கட்டுப்படுத்தக் கூடியவையாக உள்ளன.

இந்த நிலையில், டபுள் மாஸ்கிங் முறை கொரோனா பரவலில் இருந்து பெருமளவு காப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

டபுள் மாஸ்கிங் அணிந்திருக்கும்போது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கொரோனா பரவும் வீதம் மிக குறைவாக உள்ளதென ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஆய்வு நடத்திய அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு அமைப்பான CDC, ஒரு மாஸ்க் மீது மற்றொரு மாஸ்க் அணிந்திருக்கும்போது, தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

இதனால் கொரோனா தொற்று பரவும் விகிதமும் மிக குறைவாக உள்ளதென்றும் தொற்று பாதிப்பில் இருந்து 85 முதல் 95 விழுக்காடு பாதுகாப்பு அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Also Read  கொரோனா பரவலை தடுக்க 144 தடை உத்தரவு…! எங்கு தெரியுமா?

கூட்ட நெரிசல் மிக்க இடங்கள், தொற்று அபாயம் அதிகம் இருக்கக் கூடிய பகுதிகளில் டபுள் மாஸ்கின் முறை நல்ல பலனைக் கொடுப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுப்போக்குவரத்து, காற்றோட்டம் குறைவாக இருக்கும் பகுதி, சந்தை பகுதிகள், மருத்துவமனை போன்ற பகுதிகளில் டபுள் மாஸ்கிங் அவசியமான ஒன்று என்றும் டபுள் மாஸ்கிங் அணிந்திருக்கும் அதேநேரத்தில் அடிப்படை வழிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

Also Read  மக்கும் முகக்கவசம் - தொண்டு நிறுவனத்தின் அசத்தலான முயற்சி…!

மிகவும் கடினமாக அணிந்து கொள்ளாமல் மூச்சுவிடுவதற்கு ஏற்ற வகையில் சரியான முறையில் அணியும்போது டபுள் மாஸ்கிங், வைரஸ் தொற்றில் இருந்து நல்ல பாதுகாப்பை வழங்குவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ மாஸ்க் ஒன்றை அணிந்து, அதற்கு மேல் துணியினால் ஆன மாஸ்க்கை அணிவது சிறந்தது எனவும் இரண்டு மாஸ்க்குளை அணியும்போது முறையாக வாய் மற்றும் மூக்கு பகுதிகள் முழுவதுமாக மூடி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Also Read  பாராளுமன்ற வளாகத்தில் தீ, டில்லியில் பரபரப்பு

ஒன்றை மேலும், மற்றொன்றை கீழுமாக தளர்த்தியும், ஒன்றன் மீது ஒன்றாக அணிந்து கொள்ளலாம் என்றும் மாஸ்க் அணிவது மட்டுமே முழுவதுமான பாதுகாப்பை வழங்கிவிடாது என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

வெளிப்புறத்தில் துணி மாஸ்க்கும், உட்புறத்தில் சர்ஜிக்கல் மாஸ்க்கும் இருக்குமாறு உருவாக்கப்பட்டுள்ள மாஸ்க்குகளை வாங்குவது நல்லது என்றும் அழுக்காக இருக்கும் மாஸ்க்குகள், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மாஸ்க்குகளை உபயோக்கிக்க கூடாது என்றும் நிபுணர்கள் தெளிவுப்படுத்தி உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கிரிக்கெட் விளையாடி அசத்தும் யானை… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

Tamil Mint

வரட்டியால் விரட்டி அடிக்கும் வினோத திருவிழா…!முழு விவரம் இதோ..!

Lekha Shree

குடியரசு தின வன்முறை – தேடப்பட்டு வந்த நடிகர் தீப் சித்து கைது!

Tamil Mint

உ.பி.யில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் – புகார் அளித்த தந்தை விபத்தில் மரணம்

Devaraj

கொரோனா மையத்தில் மது விருந்து… ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

Lekha Shree

ஹெல்மெட் அணியாத கர்ப்பிணி பெண்ணை 3 கி.மீ நடக்க வைத்த பெண் காவலர்…!

Lekha Shree

இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்

Tamil Mint

கைக்குழந்தையுடன் போக்குவரத்தை சீர்செய்த சிங்கப்பெண் – குவியும் பாராட்டு

HariHara Suthan

பெங்களூருவில் தமிழ் நடிகை ராகினி திவேதி கைது.

Tamil Mint

“கர்நாடகாவில் ஊரடங்கு கிடையாது ” – எடியூரப்பா திட்டவட்டம்!

Shanmugapriya

முதன்முறையாக ஒரு லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு – உலக அளவில் இந்தியா தொடர்ந்து முதலிடம்…!

Devaraj