“திராவிடம் ஒரு வாழ்க்கை முறை!” – திராவிட முப்பெரும் விழாவைத் தொடங்கி வைத்த கனிமொழி எம்.பி.!


திராவிட முப்பெரும் விழாவைத் தொடங்கி வைக்கும் விதமாக கனிமொழி எம்.பி. தனது சமூக வலைதள பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு திராவிட பெருமைகளையும் திமுக ஆட்சியின் சில சாதனைகளையும் கூறியுள்ளார்.

ஆண்டுதோறும் தந்தை பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாள் ஆகியவற்றை இணைத்து செப்டம்பர் 15,16 மற்றும் 17ம் தேதிகளில் திராவிட முப்பெரும் விழா கொண்டாடப்படும்.

அந்த வகையில் இவ்வருடம் திமுக மகளிர் அணிச் செயலாளரும், தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு முப்பெரும் விழாவினைத் தொடங்கி வைத்தார்.

அந்த காணொளியில் “பத்து வருடப் போராட்டத்திற்குப் பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி, நல்லாட்சியாக மலர்ந்திருக்கிறது. இது மக்கள் விருப்பப்பட்டுத் தேர்ந்தெடுத்த ஆட்சி.

Also Read  திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி - ராகுலுடன் ஆலோசிக்க திட்டம்!

பெரியாரின் கனவான அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றி, அறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சி கொள்கையினை நிலைநிறுத்தும் விதமாக CAA சட்டத்தை எதிர்த்தும், விவசாயிகளை வஞ்சிக்கும் மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்தும் தீர்மானம் கொண்டு வந்து, ஒரு மாநிலத்தை, மாநிலத்தில் ஆட்சி செய்யும் கட்சி தான் ஆள வேண்டும் என்பதை மறுபடியும் வலியுறுத்தக் கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி அமைத்திருக்கிறது.

தலைவர் கலைஞரைப் போல எல்லோரையும் ஒன்றாக இணைத்து, எல்லோருக்கும் வாய்ப்புகளும், எல்லா மக்களுக்கும் உரிமைகளைத் தரக்கூடிய ஆட்சியாகவும் தளபதி அண்ணன் ஸ்டாலின் அவர்கள் நடத்தி வருகிறார்.

Also Read  ”திமுக ஆட்சிக்கு வந்தால் மணல் அள்ளலாம்” - செந்தில் பாலாஜி பேச்சால் சர்ச்சை! அதிமுக புகார்!

இத்தனை ஆண்டுகள் திராவிடம் நமக்குள் எந்த பாகுபாடும் இல்லை என்ற உணர்வையும், எல்லோருக்கும் உரிமை இருக்க வேண்டும், எல்லோர்க்கும் சுயமரியாதை இருக்க வேண்டும் என்ற உணர்வையும் விதைத்திருக்கிறது.

அடுத்த தலைமுறைக்கும், இந்த திராவிடத்தை எப்படி எடுத்துச் செல்வது என்பது முக்கியம். திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு உணர்வு, இயக்கம் என்பதையெல்லாம் தாண்டி, அது ஒரு வாழ்க்கை முறையாக இருக்கிறது.

Also Read  கொடநாடு கொலை வழக்கு - ஓபிஎஸ்-இபிஎஸ் பேரவைக்கு வெளியே தர்ணா..!

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இவர்களெல்லாம், இந்த மண்ணில் விதைத்திருக்கக் கூடிய விருட்சம், என்றும் நம்மைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.

அவர்களுடைய கொள்கைகளை, அவர்களுடைய கனவுகளை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்குப் பெண்கள், இளைஞர்கள், இந்த சமூகத்திலே யார் யார்க்கெல்லாம் உரிமை மறுக்கப்படுகிறதோ அவர்கள் எல்லாம், ஒன்றிணைந்து தமிழ்நாட்டை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். அந்த பாதை திராவிடம்” என கூறியுள்ளார் கனிமொழி எம்.பி.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுகவில் புதிய அணி துவக்கம்

Tamil Mint

தமிழன் டிவி நிருபர் மோசஸ் கொலை வழக்கு! மூவர் கைது! ஒருவர் தலைமறைவு

Tamil Mint

சென்னையில் 2 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை

Tamil Mint

ராகுல் வருகையால் காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் கிடைக்குமா?

Tamil Mint

பங்குனி உத்திரம் – பாஜக தேசிய தலைவர்களின் தமிழில் குவியும் வாழ்த்து…!

Devaraj

அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமை இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

Tamil Mint

ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்த ரஜினிகாந்த்…!

Lekha Shree

தொகுதி பங்கீடு… இன்னும் சற்று நேரத்தில் அமித்ஷாவுடன் ஈபிஎஸ் – ஓபிஎஸ் சந்திப்பு…!

HariHara Suthan

சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்கலாம்… முழு விவரம் இதோ..!

Lekha Shree

தை அமாவாசை: ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அலைமோதும் மக்கள் கூட்டம்!

Tamil Mint

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்

sathya suganthi

பெகாசஸ் உளவு விவகாரம் – மத்திய அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மறுப்பு..!

Lekha Shree