தொடர்மழை எதிரொலி – குட்டித் தீவாக மாறிய தி.நகர்..!


வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

சென்னையில் இரவு முழுவதும் விட்டுவிட்டு பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் மழை நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு சுரங்க பாதைகளில் மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றியதும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

Also Read  பல்ஸ் ஆக்ஸி மீட்டரை பயன்படுத்தும் முறை...! முழு விவரம் இதோ...!

சென்னை தியாகராய நகரில் உள்ள மேட்லி சுரங்கப்பாதை முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது. நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்ற போதும் தொடர் மழை காரணமாகா அங்கு கிட்டத்தட்ட 30 அடி அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கி நிற்பதால் குட்டித் தீவு போல மாறியுள்ளது தி.நகர்.

Also Read  தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு : முழு வழிகாட்டு நெறிமுறைகள் இதோ

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்கி உள்ளன.

இதையடுத்து சென்னையில் உள்ள கங்குரெட்டி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்க பாதை மற்றும் வில்லிவாக்கம் சுரங்கப்பாதை ஆகிய ஆறு சுரங்க பாதைகள் மூடப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

Also Read  டாஸ்மாக்கில் 5 பேருக்கு மேல் அனுமதி இல்லை - வழிகாட்டு நெறிமுறை வெளியீடு…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

Tamil Mint

வடகிழக்கு பருவமழை- சென்னை, திருப்பத்தூர், சிவகங்கையில் இயல்பைவிட 40 சதவீதம் அதிக மழை

Tamil Mint

தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி – விபி துரைசாமி

Tamil Mint

சானிடைசர் தேய்த்துக்கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டாம்: தீயணைப்பு துறை எச்சரிக்கை

Tamil Mint

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

Lekha Shree

இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint

சிங்கப்பூரில் இருந்து 248 காலி சிலிண்டர்களை கொள்முதல் செய்த தமிழக அரசு!

Shanmugapriya

சூரப்பா குறித்து விசாரணை நடத்த போகும் நீதிபதி பரபரப்பு பேட்டி

Tamil Mint

“அவர் சேகர்பாபு அல்ல… ‘செயல்பாபு'” – முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்..!

Lekha Shree

தமிழகம்: ஜனவரி 10ஆம் தேதி வரை மழை தொடரும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

‘தல Vs தளபதி’ – ட்விட்டரில் மோதிக்கொள்ளும் அஜித்-விஜய் ரசிகர்கள்..! ட்ரெண்டாகும் #பெத்தவர்ட்டபேசுங்கவிஜய் ..!

Lekha Shree

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறை…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!

sathya suganthi