a

கொரோனா பரவல் எதிரொலி: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான விமான சேவை ரத்து..!


இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான விமான சேவை மே 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு முடிவு.

கொரோனா 2ம் அலையின் பாதிப்புகள் பல நாடுகளில் உணரப்பட்டு வருகிறது. நிலைமையை கட்டுக்குள் வைக்க பல்வேறு நாடுகளும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் வருகின்றன.

ஆனால், நிலைமை கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம் மீண்டும் வீரியமாக தொடங்கியது.

அதன் விளைவாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

Also Read  எலும்பு என நினைத்து AirPod-ஐ சாப்பிட்ட நாய்! - பிறகு என்ன ஆனது தெரியுமா?

மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு சதவிகிதம் அதிகமாக உள்ளது. அதனால், மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் கூடுதல் புதிய கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

Also Read  மெக்சிகோவில் பழங்கால மனித மண்டை ஓடு கோபுரம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரம் குறையாததால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,636,307 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 197,894 ஆகவும் உள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14,556,209 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை… வலுக்கும் எதிர்ப்புகள்!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து 3.23 லட்சமாக உள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 2,771 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது நாடு முழுவதும் 1.76 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அரசு இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான விமான சேவை மே 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தலைக்கு வந்தது தலைபாகையுடன் போனது – இந்தியப் பெருங்கடலில் விழுந்த ராக்கெட்டின் ராட்சத பாகங்கள்…!

sathya suganthi

வயதான எஜமானருக்காக தினமும் மருத்துவமனைக்கு வந்து காத்திருக்கும் நாய்!

Tamil Mint

பறிக்கப்பட்டவரிடமே மீண்டும் சென்ற மகுடம்…! அவமானத்துக்கு பழி தீர்த்த இலங்கை திருமதி அழகி…!

Devaraj

வானில் பாரசூட் திறக்க முடியாமல் தவித்த நபர்… உதவிய கைகள்! வைரல் வீடியோ!

Devaraj

மழை நீர் மட்டுமே உணவு…! அமேசான் காட்டில் சிக்கி தவித்த பைலட்டின் திக் திக் 38 நாட்கள் …!

Devaraj

இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கும் பழங்குடியினர்…! காரணம் இதுதானா…?

Devaraj

பாராளுமன்றத்தில் “செக்ஸ் ஊழல்” – சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த அதிகாரிகள்…!

Devaraj

கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை திருடிய பெண்…!

Devaraj

புளூ மூனை பார்க்கத் தயாரா?

Tamil Mint

அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவிக்கு 2வது திருமணம்

HariHara Suthan

தொலைந்துபோன தங்க நகரம் – அள்ள அள்ள கிடைக்கும் பொக்கிஷங்கள்…!

Devaraj

“தினமும் மதியம் பழைய சாதம் தான்” – குடும்பத்திற்காக தியாகம் செய்யும் செக்யூரிட்டி!

Shanmugapriya