நடிகர் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயில் – தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்!


நடிகரும் தீவிர ஆஞ்சநேய ஸ்வாமியின் பக்தருமான அர்ஜுன் சென்னை போரூரில் உள்ள கிருகம்பாக்கத்தில் அஞ்சனாசுத ஸ்ரீ யோக ஆஞ்சநேய ஸ்வாமி மந்திரம் என்ற கோயிலை கட்டியுள்ளார்.

இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதுகுறித்து நடிகர் அர்ஜூன் கூறுகையில், “இந்த கோயில் என்னுடைய 17 வருட கனவு. இதற்கு ஏன் 17 வருடங்கள் ஆனது என்பதை விட அந்த நாட்கள் எனக்கு அளித்த அனுபவங்கள் முக்கியமானவை.

தாய், துணைவி, மகள்கள் என என் குடும்பம் எனது இந்த முயற்சிக்கு உறுதுணையாக நின்றனர் என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. மேலும் பலரின் ஆதரவும் என்னை மேலும் மேலும் இந்த நற்செயலை செய்யத் தூண்டுதலாக இருந்தது,

ஸ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்து கொடுத்தார். மேலும் ஒரு சிறப்பம்சமாக ஸ்ரீவிஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்த கோவிலுக்கு வருகை தருவதற்கு முன்பு அயோத்திக்கு சென்றிருந்தார்.

Also Read  தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! - எவைகளெல்லாம் செயல்பட தடை?

அஞ்சனாசுத ஸ்ரீயோக ஆஞ்சநேய ஸ்வாமி மந்திரம் கோயிலில் பிரதிஷ்டை செய்ய விஜயம் செய்த சுவாமிகள் தன்னுடன் அயோத்தியின் மண் எடுத்து வந்திருந்தார்.

அந்த மண்ணின் மீது இந்த கோவிலில் உள்ள ஸ்ரீ ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் துணைவியார் திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள் இக்கோவிலுக்கு வந்து ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் தரிசனம் பெற்றார்.

Also Read  டெல்டா பிளஸ் வகை வைரஸால் தமிழகத்தில் ஒருவர் பாதிப்பு!

அவரது வருகையை எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. விரைவில் இந்த கோவில் பொதுமக்களுக்காக திறக்கப்பட உள்ளது.

இந்த கொரோனாவால் பலரும் அவதிப்பட்டு வரும் நிலையில் கடவுளின் ஆசிர்வாதம் மக்களுக்கு அவசியம். கடவுளின் அருள் மக்களுக்கு கிடைக்க வேண்டும். அவர்களின் வாழ்வில் துன்பம் மறைந்து இன்பம் பெற வேண்டும் என்பதே என் ஆசை” என்று கூறினார்.

Also Read  'மெட்டி ஒலி' சிஸ்டர்ஸ் ஒன்றாக இருக்கும் அரிய புகைப்படம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகர் தவசிக்கு புற்று நோய் பாதிப்பு: சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பு

Tamil Mint

முன்னாள் நீதிபதி கர்ணன் கைது

Tamil Mint

கருப்பர் கூட்டம் செந்தில் திமுக ஐடி விங் ஊழியராம்: போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்

Tamil Mint

100 மில்லியன் வியூஸ்களை கடந்த சிம்புவின் முதல் பாடல்…!

Lekha Shree

இன்று வெளியாகிறது அஜித்தின் ‘வலிமை’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்! – ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!

Lekha Shree

PSBB பள்ளியின் டிரஸ்டி ஒய்.ஜி.மகேந்திராவின் தலைசுற்ற வைக்கும் குடும்ப பின்னணி!

sathya suganthi

மருத்துவ படிப்பு: முக்கிய மசோதாவை நிறைவேற்றியே தமிழக சட்டசபை

Tamil Mint

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடக்கம்

Tamil Mint

இன்று தொடங்கியது சென்னை புத்தக கண்காட்சி – உற்சாகத்தில் புத்தக பிரியர்கள்!

Jaya Thilagan

டீக்கடைகளுக்கு அனுமதி – ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவித்து தமிழக அரசு…! முழு விவரம்…!

sathya suganthi

மதுரை அருகே தீயணைப்புப்பணியாளர் இருவர் பலி

Tamil Mint

வெடித்து சிதறிய பலூன் -பிரதமர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் தீ காயங்களுடன் தப்பிய நிர்வாகிகள் .

Tamil Mint