மின்வாரியத்துறை தனியார் மயமாக்கப்படும் உத்தரவு ரத்து: அமைச்சர் தங்கமணி


தனியார் மூலம் பணியமர்த்தும் அரசின் முடிவுக்கு பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. 

அதைத்தொடர்ந்து, இன்று தி.மு.க தலைவர் ஸ்டாலினும் அறிக்கை வாயிலாக தனது கண்டனங்களை பதிவு செய்திருந்தார்.

இதுகுறித்து பேசிய மு.க. ஸ்டாலின், “மின்வாரியம் தனியார் மயமாக்கப்படுவதை உடனே கைவிட வேண்டும். ஏனெனில் இது தமிழகத்தையும், தமிழ் இளைஞர்களின் எதிர்காலத்தையும் இருள் மயமாக்கும். தனியாருடனான ஒப்பந்தங்கள் ஆட்சியில் இருப்பவர்களுக்கு, தனிப்பட்ட முறையில் பெரும் லாபம் தருவதாக இருக்கலாம். அவை தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே இருட்டாக்கக்கூடியவை. எனவே நியாயத்தை வலியுறுத்திப் போராடும் மின் தொழிலாளர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, தனியார்மயத்தை முற்றிலுமாக கைவிடவேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, அமைச்சர் தங்கமணி, மின்வாரியத்திற்கு தனியார் மூலம் பணியாளர்களை நியமிக்கும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் போராட்டங்களை கைவிட்டு தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார். 

Also Read  சட்டப்பேரவைக்குள் நுழையும் 234 பேர்களில் 12 பேர் மட்டுமே பெண்கள்…!

“கேங்மேன் பணியிடங்களுக்கான வழக்கை வாபஸ் பெற்றால் உடனடியாக 10 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும்” எனவும் அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் ஒருவருக்கு பச்சை பூஞ்சை நோய்…! மூக்கிலிருந்து கொட்டும் ரத்தம்…! அறிகுறி என்ன?

sathya suganthi

திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

Jaya Thilagan

கோவையை திமுக அரசு புறக்கணிக்கிறதா ? முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன பதில்…!

sathya suganthi

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பூட்டா சிங் மறைந்தார்

Tamil Mint

கமல் தலைமையில் மெகா கூட்டணி அமையுமா?

Lekha Shree

சரத்குமார் பெயரில் மோசடி, போலீசில் புகார்

Tamil Mint

முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்த அதிமுக முன்னாள் எம்.பி.! எதிர்க்கட்சியில் சலசலப்பு..!

Lekha Shree

சசிகலா வருகையால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி: வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் தேர்தல் பிரச்சார தேதி மாற்றம்!

Tamil Mint

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜனவரி 31ந் தேதி வரை நீட்டிப்பு!

Tamil Mint

தனியார் பள்ளி கல்வி கட்டணம்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Tamil Mint

“தமிழக முதல்வரின் நற்பெயரை கெடுக்கவே ஓபிஎஸ் தவறான தகவல்களை கூறுகிறார்” – அமைச்சர் ராஜகண்ணப்பன்!

Lekha Shree

முக்கிய அமைச்சர், அதிமுக எம்.பி.க்கு கொரோனா – பீதியில் அதிமுக…!

Devaraj