a

தமிழ்நாடு வளர்ச்சி கொள்கைக் குழுவில் ஜெயரஞ்சன் – மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு


தமிழ்நாடு வளர்ச்சி கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் மாநில திட்டக் குழு, கருணநிதியால் 1971 ஆம் ஆண்டு மே திங்கள் 25 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்டது என்றும் மாநில திட்டக்குழு, முதலமைச்சர் தலைமையின் கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது - வானிலை ஆய்வு மையம்

மாநில திட்டக் குழு துணைத் தலைவரின் கீழ் வளர்ச்சி சார்ந்த முக்கிய துறைகளின் நிபுணர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில திட்டக் குழுவானது, கடந்த 23.04.2020 இல் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அதன் இன்றியமையாத பணிகளான இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல், கொள்கை ஒத்திசைவு உருவாக்குதல், சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read  முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க இணையதளம் தொடக்கம்

இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவை பின்வருமாறு திருத்தியமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

பொருளாதார வல்லுநரும் பேராசிரியருமான ஜெ. ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராகவும், பேராசிரியர். இராம. சீனுவாசன் அவர்கள் முழுநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Also Read  ஒரு 100 ரூபாய் வைக்க மாட்டியா? – துரைமுருகனை கலாய்த்துச் சென்ற திருடர்கள்

பேராசிரியர் ம. விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், மு. தீனபந்து ஐஏஎஸ், (ஓய்வு), டி.ஆர்.பி. இராஜா (மன்னார்குடி எம்எல்ஏ), மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ. அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு. சிவராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கடலில் மிதந்தபடி திமுகவுக்கு வாக்கு சேகரித்த மதிமுகவினர்!

Shanmugapriya

பந்துவீச்சு முனைகளுக்கு ரிலையன்ஸ், அதானி பெயர்! நாம் இருவர், நமக்கு இருவர் என கலாய்த்த ராகுல்!

Jaya Thilagan

பாஜக வேட்பாளரின் காரில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வந்தது எப்படி? – தேர்தல் ஆணையம் தந்த விளக்கம் என்ன?

Shanmugapriya

அக்.1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி.

Tamil Mint

தடுப்பூசி குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்

Tamil Mint

இரண்டாக பிரியும் அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint

மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவரைத் தேர்வு செய்யும் தேர்வுக் குழுக் கூட்டத்தினை புறக்கணிக்கிறேன்: மு.க. ஸ்டாலின்

Tamil Mint

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்..! பின்னணியில் அதிர்ச்சி தகவல்..!

sathya suganthi

“பசு சிறுநீரால் தயாரிக்கப்பட்ட பினாயிலால் மட்டுமே அரசு அலுவலகங்களை சுத்தம் செய்ய வேண்டும்” – ம.பி அரசு

Tamil Mint

கொரோனா குறித்த தமிழக தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

“நான் வங்கப்புலி… என்னால் சிங்கத்தைப் போன்று பதிலடி கொடுக்க முடியும்…” – மம்தா பானர்ஜி

Shanmugapriya

தமிழகத்தில் பொதுமுடக்கத்தின் போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்…!

Lekha Shree