“நவம்பர் 1-ம் தேதி தான் தமிழ்நாடு நாள்” – எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி


மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்த தினமான நவம்பர் 1ம் தேதி தான் தமிழ்நாடு நாள் எனக் கூறியுள்ளார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி.

இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்து இன்றுடன் 65 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஆங்கிலேய அரசிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்பும் மெட்ராஸ் மாகாணத்திற்கு உட்பட்டு தான் இன்றைய ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தன.

பின்னர் நவம்பர் 1, 1956 ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பிரிந்து சென்றன.

எனவே, இந்த நாளையே தங்கள் மாநிலம் உருவான நாளாக அந்த மாநிலங்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் கடந்த ஆண்டு தமிழ்நாடு நாள் நவம்பர் 1ம் தேதி கொண்டாடப்பட்டது.

Also Read  டிசம்பர் 7ல் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல்..!!

இந்த நிலையில் தமிழ்நாடு பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18ஆம் தேதி தான் தமிழ்நாடு தினம் என்றும் இதுதொடர்பான அரசாணை வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதனை அதிமுக, பாமக, பாஜக போன்ற கட்சிகள் ஏற்க மறுத்துள்ளன. நவம்பர் 1ஆம் தேதி தான் தமிழ்நாடு நாள் என்று கூறி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Also Read  "பொத்தி பொத்தி வளர்க்கப்படும் உதயநிதி தலைவராக முடியாது" - அண்ணாமலை

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “‘நீலத் திரைகடல் ஓரத்திலே நின்று நித்தம் தவஞ்செய் குமரி எல்லை வட மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு!’ என்று பாரதியாரால் பாடப்பட்ட நம் தமிழ்நாடு உருவாக காரணமாக இருந்த அனைத்து தியாக உள்ளங்களையும் ‘தமிழ்நாடு தினத்தில்’ வணங்குகிறேன்.

தமிழ் அறிஞர்களாலும் தமிழ் ஆர்வலர்களாலும் ஏற்றுக்கொள்ளபட்ட நவம்பர் 1, தமிழ்நாடு தினம் நன்னாளில் ‘தமிழ் கூறும் நல்லுலகம்’ உருவாக காரணமாக இருந்த அனைத்து தியாக உள்ளங்களையும் அவர்தம் மொழிப்பற்றையும் போற்றி வணங்குகிறேன்.

Also Read  "தேர்தலில் வெல்ல மக்களை கொல்கிறீர்கள்!" - நடிகர் சித்தார்த் ஆவேசம்

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு உருவான நாளையே தனது அதிகார மமதையில் திமுக அரசு மாற்ற முயற்சிப்பதை புறந்தள்ளி. தமிழ் அறிஞர்களாலும், ஆர்வலர்களாலும் ஏற்றுக்கொள்ளபட்டு அம்மா அரசால் அறிவிக்கப்பட்ட நவம்பர் 1ம் தேதியே தமிழ்நாடு தினமாக கொண்டாடுவொம்” என பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முதலமைச்சராக மு.க.ஸ்டாலினின் முதல் சைக்கிள் பயணம் – செல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்…!

sathya suganthi

கொரோனா அப்டேட்: 24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழப்பு..!

suma lekha

தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி!!

Tamil Mint

ராஜ் பவனை சுழற்றி அடிக்கும் கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்ட தமிழக ஆளுநர்

Tamil Mint

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு விருதுகளை அறிவித்தார் முதல்வர்

Tamil Mint

வன்முறையை தடுக்க முடியவில்லை – பதவியை ராஜினாமா செய்வதாக திரிணாமூல் காங். எம்.பி. அறிவிப்பு

Tamil Mint

டிஎன்பிஎஸ்சி மற்றும் ஜேஇஇ தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியீடு

Tamil Mint

“பீகாரிகளுக்கு மூளை கம்மி!” – அமைச்சர் நேரு பேச்சால் சர்ச்சை!

suma lekha

ஆ.ராஜா மீது தமிழக முதல்வர் கடும் தாக்கு

Tamil Mint

“38,000 பெண்களுக்கு தலா 5 ஆடுகள்” – தமிழக அரசு அரசாணை…

Lekha Shree

தமிழ்நாடு: கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய தடை இல்லை…!

Lekha Shree

சுயநினைவின்றி சாலையில் கிடந்த நபர்… தோளில் தூக்கிச் சென்று உதவிய பெண் காவல் ஆய்வாளர்!

Lekha Shree