முதல்வர் பழனிசாமி 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை எடப்பாடியில் தொடங்கினார்


தமிழகத்தில் 2021ம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதம் தொடக்கத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல்  நடைபெற உள்ளது. அதனால்  தேர்தலை சந்திக்க திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தயாராகி வருகிறது. 

‘தமிழகம் மீட்போம்’ என்ற தலைப்பில் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்களை திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நடத்தி வருகிறார். மேலும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

Also Read  ஸ்டெர்லைட்டுக்கு 4 மாதத்திற்கு அனுமதி - அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

அதையடுத்து இன்று சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து தொடங்கினார்.  எடப்பாடியில் நடந்து சென்றபடி, 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட  பிரச்சாரத்தை தொடங்கினார் முதல்வர் பழனிசாமி. 

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் முதல்வரை வரவேற்க எடப்பாடியில் ஆயிரகணக்கான தொண்டர்கள் குவிந்தனர். அதிமுக அரசின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்ட முதல்வர், மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய ஒரே கட்சி அதிமுக தான் என்று கூறினார்.

Also Read  திண்டிவனம் ராமமூர்த்தி மறைவு… காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல்..!

மேலும் அதிமுக கொடி மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவம் பொறிக்கப்பட்ட வாகனத்தில் தமிழகம் முழுவதும் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

Also Read  தமிழ்வழி பயின்றவர்களுக்கு முன்னுரிமை - சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் தொடரும் ஆணவக்கொலை; கரூரில் நடந்த திடுக்கிடும் சம்பவம்!

Tamil Mint

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு கிடுக்குபிடி – புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

sathya suganthi

ஊரடங்கில் அடுத்த தளர்வுகள் என்னென்ன? – முழு விவரம் இதோ…!

sathya suganthi

“கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட வேண்டாம்” – தமிழக சுகாதாரத்துறை

Lekha Shree

அரபிக்கடலில் உருவானது டவ்தே புயல்! குமரியில் கொட்டித் தீர்த்த கனமழை!

Lekha Shree

அதிமுக தலைமை அறிக்கை… அச்சமா? அறிவுரையா?

Devaraj

நிவாரணத்தொகை பொருட்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு : தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

suma lekha

கொரோனா தடுப்பு ஆலோசனைக்குழு – முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சேர்ப்பு

sathya suganthi

சிவகார்த்திகேயனின் தந்தை கொல்லப்பட்டாரா? – எச்.ராஜா பேச்சால் பரபரப்பு!

Lekha Shree

பிரதமரின் காலில் விழ முயன்ற அதிமுக எம்பி – மோடி கொடுத்த சூப்பர் அட்வைஸ்! இது தேவையா?

Lekha Shree

யூடியூபர் மதனின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Lekha Shree

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு – சென்னை அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Lekha Shree