5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு…!


உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறுகையில் தலைமை தேர்தல் ஆணையர், “தேர்தலை தள்ளி வைப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. 5 மாநிலங்களுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.

மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27, மார்ச் 3 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.

ஜனவரி 15-ம் தேதி வரை பிரச்சார பொதுக் கூட்டங்கள், ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை டிஜிட்டல் காணொளி வாயிலாக மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பரப்புரை செய்ய அனுமதி உண்டு. வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Also Read  வீரியம் எடுக்கும் கொரோனா! - அபாயத்தை நோக்கி இந்தியா?

மேலும், அனைத்து மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறும்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10 முதல் கட்ட தேர்தல் நடைபெறும். வேட்புமனு தாக்கல் தொடக்கம் ஜனவரி 14 தொடங்கும். வேட்புமனு தாக்கல் கடைசி நாள் ஜனவரி 21. வேட்புமனு பரிசீலனை ஜனவரி 24. வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் ஜனவரி 27.

பஞ்சாப், உத்தரகாண்ட், கோவாவில் பிப்ரவரி 14 தேர்தல் நடைபெறும். வேட்புமனு தாக்கல் ஜனவரி 21. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 28. வேட்புமனு பரிசீலனை செய்ய ஜனவரி 29. வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் ஜனவரி 30.

5 மாநில தேர்தலில் மொத்தம் 18.34 கோடி வாக்காளர்கள் பங்கேற்பார்கள். அவர்களில் 8.55 கோடி பெண் வாக்காளர்கள். 24.98 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள். 5 மாநிலங்களில் உள்ள 690 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

Also Read  "மாணவர் தனுஷின் இறப்பிற்கு திமுக தான் முழு பொறுப்பு!" - அண்ணாமலை குற்றச்சாட்டு

5 மாநில தேர்தலில் வாக்களிக்க உள்ள 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு முறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவை கருத்தில்கொண்டு ஆன்லைனிலும் வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட, கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ள நபர்கள் தொடர்பான விரிவான தகவல்களை அரசியல் கட்சிகள் தங்கள் இணையதளத்தில் பதிவேற்றுவது கட்டாயம்.

Also Read  உலகின் விலை உயர்ந்த காயை சாகுபடி செய்யும் விவசாயி! - ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

வேட்பாளரை தேர்வு செய்வதற்கான காரணத்தையும் அவர்கள் தெரிவிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் கருத்தில் கொண்டு அனைத்து வாக்குச் சாவடிகளும் தரை தளத்திலேயே அமைக்கப்படும்.

ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 16% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் புகார்களை தெரிவிக்க பொதுமக்கள் சி-விஜில் செயலியை பயன்படுத்தலாம். கொரோனா காரணமாக வாக்குச்சாவடிகளில் அதிகபட்ச வாக்காளர்களின் எண்ணிக்கை 1500-லிருந்து 1,250 ஆக குறைக்கப்படுகிறது.

தேர்தல் பணியில் ஈடுபட கூடிய அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும். 5 மாநிலங்களிலும் வாக்குப் பதிவு செய்ய கூடுதல் ஒரு மணி நேரம் வழங்கப்படும்” என கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு – பிரதமர் மோடி வாழ்த்து..!

suma lekha

விஜய்காந்த் உடல்நலம் குறித்த அப்டேட்… விஜயபிரபாகரன் சொல்வது என்ன?

suma lekha

உணவில் போதைமருந்து கலந்து 17 மாணவிகள் பாலியல் வன்கொடுமை..! பள்ளி முதல்வர் கைது..!

Lekha Shree

நீட் தேர்விலிருந்து விலக்கு – முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்..!

Lekha Shree

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றவர் சுட்டுக் கொலை

Tamil Mint

இதுவரை யாருக்குமே கொரொனா பாதிப்பு ஏற்படாத ஒரே கிராமம்.. எங்குள்ளது தெரியுமா..?

Ramya Tamil

இந்திய வீரர்கள் கடைசி போட்டியில் கருப்பு பட்டை : காரணம் இதுதான்

suma lekha

ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார்

Tamil Mint

சிறை வாழ்க்கை எப்படி இருக்கும்னு பாக்கனுமா? வெறும் ரூ.500 போதும்

suma lekha

பெட்ரோல் விலை 22 நாட்களாக மாறாத மாயம் என்ன?

Devaraj

டிவி சீரீஸ் ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறிய ரிசாட்டுகள்!

Shanmugapriya

ஜெய்ப்பூர்: வெளியான நீட் தேர்வு வினாத்தாள்… மோசடியில் ஈடுபட்ட மாணவி உட்பட 8 பேர் கைது…!

Lekha Shree