a

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்தது ஏன்..? கமல்ஹாசன் ஆலோசனை..


தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்துள்ளது.. திராவிடக் கட்சிகளுக்கு மாற்று, தங்கள் கூட்டணி தான் முதல் அணி என்று சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே போன்ற மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணி கட்சிகளும் படுதோல்வி அடைந்துள்ளன..

நாம் தமிழர் கட்சி பெரும்பாலான இடங்களில் 3-வது இடத்தை பிடித்த நிலையில், மக்கள் நீதி மய்யம் பாஜகவை விடவும் குறைந்த வாக்கு சதவீதத்தையே கொண்டுள்ளது இந்த தேர்தல் முடிவுகளில் தெரிய வந்துள்ளது..

Also Read  ஓய்வு பெற உள்ள அதிகாரிகளுக்கு தேர்தல் பணி வழங்கக் கூடாது: தேர்தல் ஆணையம்

அதாவது, 2019 மக்களவைத் தேர்தலில் 3.71 ஆக இருந்த மக்கள் நீதி மய்யத்தின் வாக்கு சதவீதம், இத்தேர்தலில் 2.45 சதவீதமாக குறைந்துள்ளது.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தொடக்கத்தில் முன்னிலையிலும் இருந்தாலும், நீண்ட இழுபறிக்கு பிறகு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,358 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார்.

Also Read  விஜயகாந்த்-உதயநிதி ஸ்டாலின் திடீர் மீட்…! காரணம் இதுதானா…!

அதுமட்டுமின்றி, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட துணை தலைவர் மகேந்திரன், மற்ற முக்கிய நிர்வாகிகளான சி.கே.குமரவேல், பழ.கருப்பையா, பொன்ராஜ், ஸ்ரீப்ரியா, சிநேகன், சந்தோஷ் பாபு உள்ளிட்டோரும் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.

இந்நிலையில் இந்த படுதோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் துணை தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.

Also Read  திமுக முன்னாள் அமைச்சர் பூங்கோதை தற்கொலை முயற்சியா? பரபரப்பு தகவல்கள்

2019 மக்களவை தேர்தலை விட, இந்த சட்டமன்ற தேர்தலில் ஏன் வாக்கு சதவீதம் குறைந்தது என்பது குறித்தும், கட்சிக் கட்டமைப்பில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பது குறித்தும் இக்கூட்டத்தில் கமல் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தி தெரியாது என்றதால் நீங்கள் இந்தியரா என்ற கேள்வி?

Tamil Mint

அமமுக அலப்பறைகள்… சசிகலாவின் முடிவு என்ன? ஆப்பு யாருக்கு?

Bhuvaneshwari Velmurugan

பிப்.22-ல் புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் – பெரும்பான்மையை நிரூபிக்குமா காங்.?

Bhuvaneshwari Velmurugan

திரையரங்குகளில் இன்று முதல் மீண்டும் திறப்பு

Tamil Mint

தயாநிதியை கட்டியணைத்த உதயநிதி! – பதவியேற்பு விழாவில் நெகிழ்ச்சி சம்பவம்!

Shanmugapriya

காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Tamil Mint

முன்னாள் மேயர் மா சுப்ரமணியனுக்கு கொரோனா

Tamil Mint

சசிகலா வருகையால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி: வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் தேர்தல் பிரச்சார தேதி மாற்றம்!

Tamil Mint

தேர்தல் பிரச்சாரத்தில் பணம் விநியோகம் – அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு…!

Devaraj

7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநரிடம் தமிழக முதலமைச்சர் வலியுறுத்தல்!

Tamil Mint

விஜயலட்சுமி தற்கொலை முயற்சி: கைதாகிறாரா சீமான்?

Tamil Mint

அதிமுக கூட்டணியில் பாமக? வன்னியர் இடஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு?

Tamil Mint