ஜப்பானில் அவசரநிலை பிரகடனம்… ஒலிம்பிக் போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு தடை..!


ஜப்பானில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்புகளால் அந்நாட்டில் வரும் 12ஆம் தேதி முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒலிம்பிக் போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடைபெற உள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது.

Also Read  கொரோனா தடுப்புப் பணியில் ரோபோ...!

கொரோனா எதிரொலியாக போட்டியை ரசிக்க வெளிநாட்டு ரசிகர்களுக்கு அந்நாடு தடை விதித்திருந்தது. ஆனால், உள்நாட்டு ரசிகர்கள் 10,000 பேர் வரை கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜப்பானில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஜப்பான் நாட்டின் பிரதமர் யோஷிஹிடே சுகா வரும் 12ம் தேதி முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நெருக்கடி நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

Also Read  இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு!

இதனால் அவசர நிலை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதனையடுத்து இந்த ஒலிம்பிக் போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடைபெற இருக்கிறது.

ரசிகர்கள் வாங்கும் டிக்கெட் மூலம் மட்டும் ரூ. 6,000 கோடி வருவாய் கிடைக்கும் என்று போட்டி அமைப்பாளர்கள் மதிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது அவசர நிலையால் ஒலிம்பிக் கமிட்டி பெருத்த இழப்பை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Also Read  ஆஸ்கர் : அதிக விருதுகளை வென்ற 5 திரைப்படங்கள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டிராஃபிக் அதிகம் உள்ள சாலையில் கார் ஓட்டிச்சென்ற 5 வயது சிறுவன்; பெற்றோரைத் தேடும் போலீஸ்! – வீடியோ

Tamil Mint

இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் – இந்தியா புறக்கணிப்பு!

Lekha Shree

ஆஸ்திரேலியாவில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம்! கடலோர மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை!

Tamil Mint

ஆக்ஸ்போர்ட்டின் கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்!!

Tamil Mint

28 ஆண்டுகளாக இருட்டில் வாழும் பெண்! – அமெரிக்காவில் வினோதம்

Shanmugapriya

இன்று முதல் நோபல் பரிசுகள்

Tamil Mint

ஐ.நா. சபையில் சீர்திருத்தங்கள் தேவை: மோடி வலியுறுத்தல்

Tamil Mint

கொரோனா தடுப்பு ஊசி போட்டு கொள்பவர்களுக்கு சேமிப்பு பத்திரம்!

Shanmugapriya

இந்தியாவுக்கு டுவிட்டர் நிறுவனம் கொரோனா நிவாரண நிதி – எவ்வளவு கோடி தெரியுமா…!

sathya suganthi

ஆன்லைனில் கசிந்த 50 கோடி பேஸ்புக் கணக்கு விவரங்கள் – ஹேக்கர்கள் அட்டூழியம்

Devaraj

கறுப்பர்களுக்கு எதிராக அமெரிக்காவில் தொடரும் வன்முறை

Tamil Mint

இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கும் பழங்குடியினர்…! காரணம் இதுதானா…?

Devaraj