வேலையை விட்டு நிறுத்திய நிறுவனம்… 5 ஆண்டுகள் போராடி லட்சத்தில் நஷ்ட ஈடு பெற்ற ஊழியர்..!


பாரிஸ் நகரை சேர்ந்த பெட்ரிக் என்ற இளைஞர் ஒரு காஸ்மெட்டிக்ஸ் நிறுவனத்தில் 4 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். ஒருநாள் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர் ஒருவரை இழப்பதற்கு பெட்ரிக் காரணமாகி விட்டதால் அவருக்கு அலுவலகத்தில் மரியாதை குறைந்துள்ளது.

Also Read  பணமோசடி வழக்கு - முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் கைது..!

மேனேஜர் அந்தஸ்தில் இருந்த அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக வேலை எதுவும் கொடுக்கப்படாமல் நிறுவனத்தின் தலைவருக்கு காபி வாங்கி வருவது, கடைகளுக்கு சென்று வருவது என ஆபீஸ் பாய் வேலைகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.

இதனால் மிகவும் மனம் நொந்து போயுள்ளார். இதையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு அந்நிறுவனம் கார் விபத்து காரணமாக ஓய்வில் இருந்த அவரை வேலையைவிட்டு அனுப்பியுள்ளது.

இதையடுத்து அடுத்த ஆண்டே தனது நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போது பெட்ரிக்குக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது.

Also Read  பீகார்: பாய்லர் வெடித்ததில் 6 பேர் உயிரிழப்பு… ரூ. 4 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்..!

ஊழியரின் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக அவர் பணியாற்றிய நிறுவனம் சுமார் 40 ஆயிரம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ. 33 லட்சம்) இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குண்டு மழையால் தரைமட்டமான கட்டடங்கள் – 10 வயது சிறுமியின் நெஞ்சை உருக்கும் அழுகை…!

sathya suganthi

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு – டெரிக் சாவினுக்கு 22.5 ஆண்டுகள் சிறை தண்டனை..!

Lekha Shree

அதிபர் டிரம்பின் கொரோனா குறித்த சிறப்பு ஆலோசகர் ராஜினாமா

Tamil Mint

கொரோனா தடுப்பூசி: உலகளவில் இந்தியா படைத்த சாதனை என்ன தெரியுமா?

sathya suganthi

‘நான் ஐபோன்களை பயன்படுத்துவதில்லை’ – பிரபல தொழிலதிபர் கூறிய சுவாரஸ்ய தகவல்!

Shanmugapriya

ஒலிம்பிக் ஜோதியை அணைக்க முயன்ற பெண் கைது!

suma lekha

இருளில் மூழ்கிய சீனா..! தினமும் 9 மணிநேரம் மின்தடை..! என்ன காரணம்?

Lekha Shree

தொழில்நுட்ப வளர்ச்சியால் இறந்துபோன தன் மனைவியை சந்தித்த கணவர்! தென்கொரியாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Tamil Mint

5 சிறுநீரகங்களுடன் உயிர் வாழும் நபர்…! காரணம் இதுதான்..!

Lekha Shree

செவ்வாய் கிரக சூழலில் வாழ பயிற்சி அளிக்கும் நாசா…! எப்படி தெரியுமா?

Lekha Shree

இன்றைய தலைப்புச் செய்திகள்..!

Lekha Shree

தைவான் டு ஜப்பான் – காண்டாமிருகத்தின் காதல் பயணம்…!

Lekha Shree