தமிழகம்: சுற்றுச்சூழலை பேணி காக்க 2.63 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது


தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க சிப்காட் தொழிற் பூங்காக்களில் ரூ.10.36 கோடியில் 2.63 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. 

“தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், தொழில் பூங்காக்கள் உள்ள இடங்களை  மேம்படுத்தும் வகையில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அரசுக்கு துணை நின்று,  பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றது.

Also Read  சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை... பலத்த காற்றுடன் மழை நீடிப்பு..!

கடந்த 2019ம்  ஆண்டு, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், ஜூலை மாதம், அனைத்து தொழில் பூங்காக்களிலும் மரக்கன்றுகளை நட்டு, அவற்றை சரிவர பேணி, திரும்பும் திசையெல்லாம்  பச்சைப்பசேலென செடிகளும், செடிகள் வளர்ந்த நிலையில் மரங்களும் மேற்கொண்டு வருகின்றது.

இதுவரையில் ஏறத்தாழ 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. செய்யாறு, ராணிப்பேட்டை, கடலூர்,  ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், ஓசூர், நிலக்கோட்டை, சிறுசேரி, இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட 18 தொழிற் பூங்காக்களில் முப்பத்திரண்டு வகை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 

Also Read  நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தற்போதும் தொடர்கின்றன - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

எஞ்சியுள்ள மரக்கன்றுகளும் வரும் 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நடப்படும். நடப்பட்ட  மரக்கன்றுகளை வளர்த்து பாதுகாக்கும் பொறுப்பையும் சிப்காட் நிறுவனம்  மேற்கொண்டு வருகிறது” என தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

காஞ்சிபுரம் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம் ரத்து

Tamil Mint

அதிமுக 160 இடங்களில் வெல்ல வேண்டும்: நிர்வாகிகளுக்கு எடப்பாடி கட்டளையா?

Devaraj

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் திருநங்கைகள்!

Shanmugapriya

தனுஷ் போட்ட ஒரு ட்வீட்… கொதித்தெழுந்த அஜித் ரசிகர்கள்..! என்ன காரணம்?

Lekha Shree

தூய்மை இந்தியா: கழிவறையை சுத்தம் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..!

Lekha Shree

திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் கருணாஸ்… இணைந்து கொண்ட தமிமுன் அன்சாரி!

Lekha Shree

கள்ளக்குறிச்சி எம்எல்ஏவின் மனைவி பரபரப்பு வீடியோ வெளியீடு

Tamil Mint

அதிமுக-வின் முதல்வர் வேட்பாளரை சசிகலா தான் தேர்வு செய்வார் – டிடிவி தினகரன்!

Tamil Mint

“செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகளை திறக்க தயார்” – அமைச்சர் அன்பில் மகேஷ்

Lekha Shree

“கோடநாடு விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை” – முதலமைச்சர் ஸ்டாலின்

Lekha Shree

குட் நியூஸ் மக்களே, சென்னையில் மேலும் தளர்வுகள் விரைவில்

Tamil Mint

பள்ளி மாணவர்களிடையே நடக்கும் சண்டைக்காட்சி…வைரல் ஆகும் காணொளி!

Lekha Shree