புதிய வனப்பாதுகாப்பு சட்ட திருத்தம் – எதிர்ப்புகள் வலுக்க காரணம் என்ன?


மத்திய அரசின் புதிய வனப்பாதுகாப்பு சட்ட திருத்தத்திற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1980ஆம் ஆண்டு இந்தியாவில் இயற்றப்பட்ட வனப்பாதுகாப்பு சட்டத்தை திருத்துவதற்கான முன்மொழிவுகள் அடங்கிய ஆவணத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்கள் தெரிவிக்க 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆவணத்தில் முன்மொழிந்துள்ள திருத்தம் வன நிலங்களை எவ்வித கேள்வியுமின்றி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நோக்கத்தோடு முன்வைக்கப்பட்டுள்ளதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசின் இந்த சட்டத்திருத்தம் புதிய சாலைகளையும் ரயில் பாதைகளையும் காடுகளில் அமைக்க வழி வகுக்கும் என்பதால் வனப்பகுதிகள் சிறு சிறு துண்டுகளாக மாறும், காட்டு பயிர்கள் வாழ்விடங்கள் சுருங்கும், மனித-விலங்கு மோதல் சம்பவங்கள் அதிகரிக்கும் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

Also Read  இங்கிலாந்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! - 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு!

2021 தொடங்கி அடுத்த 10 ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள மேற்கொள்ள வேண்டிய அத்தனை மாற்றங்களையும் செய்வதற்கான ஆண்டுகளாக ஐ.நா. அறிவித்துள்ளதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் 1980ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வனப்பாதுகாப்பு சட்டத்தை திருத்துவதற்கு முன்மொழிவுகளை மத்திய அரசு வெளியிட உள்ளதை சில அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்த சட்ட திருத்தத்தால் வனத்தை ஒட்டிய பகுதிகளில் துளையிட்டு கனிம வளங்களை எடுக்க முடியும், ஆராய்ச்சி செய்ய அனுமதி என்பதால் சேகரிக்கப்படும் கழிவுகள் எங்கே கொட்டப்படும் என கேள்வி எழுப்பப்படுகிறது. இதனால் காட்டின் தன்மை முற்றிலும் அழிந்துபோகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also Read  கனமழை, நிலச்சரிவுகளால் கடும் பாதிப்பை சந்தித்து வரும் உத்தரகாண்ட்..!

நாட்டின் பாதுகாப்புக்காக வரும்போது வனத்துறையின் அனுமதி தேவையில்லை, புதிய திட்டங்களுக்கு கிராம சபைகளில் அனுமதி தேவையில்லை என இதுபோன்ற பல்வேறு அம்சங்கள் அந்த முன்மொழிவில் இடம் பெற்றுள்ளதால் புதிய வனப்பாதுகாப்பு சட்ட திருத்தத்தை எதிர்ப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா லேசான அறிகுறிகள் உள்ளதா…! இதோ உங்களுக்கான சிம்பிள் அட்வைஸ்கள்…!

Devaraj

மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Tamil Mint

கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடம் காணப்படும் ஆபத்தான கருப்பு பூஞ்சை தொற்று.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

Ramya Tamil

மேற்கு வங்கத்தில் சாவர்க்கர் குறித்த சர்ச்சை கேள்வி… கொதித்தெழுந்த பாஜக…! என்ன நடந்தது?

Lekha Shree

உயர்கல்வி : மாணவியர் சேர்க்கையில் தமிழகத்துக்கு 2வது இடம்…!

sathya suganthi

அடுத்த ஆண்டு 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும்: யுனிசெப் அறிவிப்பு

Tamil Mint

டெல்லி முதல்வர் மகளிடம் பண மோசடி! பிரபல ஆன்லைன் விற்பனை தளம் மூலம் பணம் பறிப்பு!

Tamil Mint

அசத்தலான சுவை! – விற்பனையில் பட்டையைக்கிளப்பும் நூர்ஜஹான் மாம்பழம்!

Shanmugapriya

கொரோனா தடுப்பூசி போட்ட சில நிமிடங்களில் சுருண்டு விழுந்து இறந்த முதியவர்

Devaraj

ஈரோட்டில் போலி ரயில் ஓட்டுனர்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் செய்தனர்.!

mani maran

புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்வதற்கு புதிய விதிகள்

Tamil Mint

என்ன விலை வேண்டுமானாலும் கொடுத்து விவசாயிகளின் நலன்களை பாதுகாப்போம்: பிரதமர் மோடி உறுதி

Tamil Mint