a

அதிமுகவில் தொடரும் போஸ்டர் யுத்தம்? – வைரலாகும் ஈபிஎஸ் ஆதரவாளர்களின் பதிலடி போஸ்டர்!


சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து அறிக்கைகள் வெளியிட்டு வந்த நிலையில் தற்போது ஓபிஎஸ் தனியாக அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் பழனிச்சாமிக்கு எதிராகவும் திருநெல்வேலி நகரின் பல்வேறு இடங்களில் நேற்று போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

Also Read  பாஜக எம்.பி டெல்லி இல்லத்தில் மர்ம மரணம்…!

அதில், பன்னீர்செல்வத்தை கலந்தாலோசிக்காமல் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. அவரை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவுகளின் காரணமாகவே சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்திக்க நேரிட்டது. எதிர்காலங்களில் அதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டால் தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம் என மானூர் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தனர்.

இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக நெல்லை நகர் முழுவதும் முன்னாள் நிர்வாகிகள் சார்பில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.

அதில் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அதில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரின் படமும் இடம் பெற்றிருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவே இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

நேற்று ஒட்டப்பட்டிருந்த போஸ்டருக்கு பதிலளிக்கும் விதமாக இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது என்ற எண்ணத்தை கட்சியின் தொண்டர்கள் இடையே இது ஏற்படுத்தியுள்ளது.

Also Read  கடலில் மிதந்தபடி திமுகவுக்கு வாக்கு சேகரித்த மதிமுகவினர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை

Tamil Mint

வேலியே பயிரை மேயலாமா? – பள்ளிகளில் நடைபெறும் பாலியல் அத்து மீறல்கள் குறித்து கி வீரமணி அறிக்கை

Shanmugapriya

பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவிப்பு…

Tamil Mint

“தமிழ்கூறும் நல்லுலகம்”: சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ் மொழி விழா…!

Lekha Shree

காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் மாற்றம்…!

sathya suganthi

PSBBக்கு எதிராக மாடல் அழகி புகார் கூறுவதா? – வெகுண்டெழுந்த காயத்ரி ரகுராம்…!

sathya suganthi

ஓபிஎஸ் மகனை கரெக்ட் செய்த இபிஎஸ்! சசிகலா பிராஜக்ட் தோல்வியடையுமா?

Lekha Shree

திருமாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வாபஸ்

Tamil Mint

பாஜக வேட்பாளர் பட்டியல் இதோ…!

Devaraj

அடுத்தடுத்து கொரோனாவிடம் சிக்கும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள்…!

Devaraj

பாலியல் புகார் – மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் கைது!

Lekha Shree

“நீட் தேர்வுக்கு பயிற்சி தர அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி இல்லை” – அமைச்சர் செங்கோட்டையன்

Tamil Mint