a

அனல்பறந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ; ஆடிப்போன ஒபிஎஸ்… நடந்தது என்ன ? இனி நடக்கப்போவது என்ன ?


தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சிக்கு கைப்பற்றி உள்ளது.

65 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க., சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

இந்த நிலையில் அ.தி.மு.க. சட்டமன்ற தலைவரை தேர்ந்தெடுகக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 7 ஆம் தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதில் காரசார விவாதம் நடைபெற்றதாகவும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே நேரடி கருத்து மோதலும் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை முடிவு செய்ய முடியாமல் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்தது. புதிய சட்டமன்றம் நாளை கூட இருப்பதால், எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு அ.தி.மு.க. தள்ளப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று காலை 9:45 மணியளவில் மீண்டும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கியது. தொடக்கம் முதலே சலசலப்புகள் எழுந்துள்ளன.

Also Read  "இப்படி அவமானப்படுத்த வேண்டாம்" - சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த முதல்வர் மம்தா பானர்ஜி

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிப்பது என பேச்சு எழுந்தபோது பெருவாரியான தரப்பு எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும் மற்றொரு தரப்பு ஓபிஎஸ் தான் என்றும் குரல் எழுப்பியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் மௌனம் கலைத்த ஓபிஎஸ் “எல்லா நேரத்திலும் என்னால் விட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்க முடியாது” என கோபப்பட்டு உள்ளார்.

மேலும், “நான் எதிர்க்கட்சித் தலைவர் ஆகவில்லை என்றால் பரவாயில்லை அண்ணன் தனபாலை நாம் சேர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்போம்” என கூறியுள்ளார்.

இப்படியாக ஒவ்வொருவரும் பலவித கருத்துக்களை முன்வைத்து வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, “சேலம் மாவட்டத்தில் இருக்கிற 11 தொகுதிகளில் 10 தொகுதிகளையும் கோவை மாவட்டத்தில் 10க்கு 10 தொகுதியும் வென்று கொடுத்திருக்கிறோம்.

Also Read  "கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட வேண்டாம்" - தமிழக சுகாதாரத்துறை

பெருவாரியான இடங்களில் அதிமுகவை ஜெயிக்க வைத்து இருக்கிறோம். ஆனால் தென் மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளை நீங்கள் கைப்பற்றினீர்கள்?

இவ்வளவு தொகுதிகளை வென்ற நாங்க எப்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க முடியும்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பின்னர் வேறு வழியே இல்லாமல் ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்ற குழு தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகும் தேர்வு செய்ய ஒப்புக்கொண்டுள்ளார்.

பின்னர் ஒரு வாழ்த்து கூட தெரிவிக்காமல் கூட்டத்திலிருந்து முதல் ஆளாக வேக வேகமாக வெளியேறி இருக்கிறார். இதைப்பார்த்த இபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர், “எங்கே இவ்வளவு வேகமாக மறுபடியும் கிளம்பிட்டாரு? தர்மயுத்தம் ஆரம்பிப்பாரா?” என கிண்டலடித்துளள்னர்.

இதன்மூலம் அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்று அப்பட்டமாக தெரிகிறது.

இந்த பூசல் நாளடைவில் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற குரல் எழும்ப காரணமாக அமையலாம் என சிலர் கூறுகின்றனர்.

Also Read  தமிழகத்தில் கொரோனா தீவிரமடைய தேர்தல் பிரச்சாரம் காரணமா?

அப்போது எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் தலைவராகவும் செயலாளராகவும் முன்னெடுக்கும் முயற்சிகள் நடத்தும் பட்சத்தில் பிரச்னை எடப்பாடி VS சசிகலா என மாறலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

ஏனென்றால் தற்போது மன்னார்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மீண்டும் அதிமுகவிற்கு சசிகலா தலைமை ஏற்று வழி நடத்த வேண்டும் என்ற போஸ்டர்கள் முளைக்க ஆரம்பித்து இருக்கின்றன.

மேலும், நாளடைவில் ஓபிஎஸ்-க்கு அளிக்கப்பட்டு வரும் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு அவர் ஓரம் கட்டப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கணிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஆனால், பல ஆண்டுகால அரசியல் அனுபவம் உள்ள ஓபிஎஸ் அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்கமாட்டார் என கூறுகின்றனர்.

இதனால் அவர் கட்சியில் மீண்டும் ஏதேனும் புரட்சியை அல்லது தர்மயுத்தத்தை தொடங்குவாரா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எடப்பாடி விவசாயி அல்ல: ஸ்டாலின்

Tamil Mint

“தேமுதிக விலகியதால் பாதிப்பு இல்லை” – எல். முருகன்

Shanmugapriya

இந்தியாவில் இந்து மரபணு மட்டும்தான் உள்ளது – ஆர்எஸ்எஸ் தலைவர் தத்தாத்ரேயா சர்ச்சை பேச்சு!

Lekha Shree

பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய இடைக்கால தடை!

Lekha Shree

பிஎஸ்பிபி பள்ளி சம்பவத்தின் எதிரொலி – அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை!

Lekha Shree

ரஜினி ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதி

Tamil Mint

கொரோனாவால் இறந்தவர்கள் உடலை ஒப்படைக்க லஞ்சம்… 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்..!

Lekha Shree

தமிழகத்தில் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு?

Lekha Shree

கோயில்…மசூதி…சர்ச்…ஆல் டவுண்டிங்கில் சசிகலா…!

Devaraj

மேலும் தளர்வுகள் குறித்து முதல்வர் நாளை ஆலோசனை

Tamil Mint

தேசிய கொடி ஏற்றிய திருநங்கை! திருச்சியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Tamil Mint

பூலித்தேவன் பிறந்தநாள் விழா ரத்து

Tamil Mint