a

ஈபிஎஸ்-ஓபிஎஸ் திடீர் சந்திப்பு! – காரணம் இதுதான்?


சென்னை எழும்பூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான பழனிச்சாமி இன்று சந்தித்து பேசினார்.

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு அவரும் பன்னீர்செல்வமும் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டு வந்தனர். இதனால் விரைவில் அக்கட்சி இரண்டாக பிரியும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.

Also Read  கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் - தமிழக அரசு எச்சரிக்கை

இந்நிலையில் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பழனிச்சாமி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை.

கூட்டம் முடிந்த பின்னர் பழனிச்சாமி நிருபர்களிடம் கூறும்போது, “பன்னீர்செல்வம் வீடு கிரகப்பிரவேசம் நடப்பதால் அவர் கலந்து கொள்ளவில்லை. நல்ல நாள் என்பதால் முதன் முதலாக அலுவலகம் வந்து செல்கிறேன்” என தெரிவித்தார்.

Also Read  வைரல் ஆகும் அமைச்சர் விஜயபாஸ்கரின் பரப்புரை வாகனம்! எவ்வளவு ஸ்டிக்கர்ஸ்..!

மேலும், “எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. மக்கள் நலன் கருதியே அறிக்கை வெளியிடப்படுகின்றன” என தெரிவித்த அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ள பன்னீர்செல்வத்தை இன்று பழனிசாமி நேரில் சந்தித்து பேசினார்.

Also Read  மதுரையில் ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - மு.க. அழகிரியை சந்திக்க வாய்ப்பு!

இது பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய நிலையில் தற்போது பன்னீர்செல்வத்தின் தம்பி மறைவிற்காக ஆறுதல் கூறவே சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சத்தியமூர்த்தி பவனுக்கு ஸ்டாலின் திடீர் வருகை

Tamil Mint

வெளிநாட்டில் மருத்துவ பயின்ற 500 பேர் தமிழகத்தில் பணியாற்ற அனுமதி

sathya suganthi

கார் இருக்கை தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

Tamil Mint

ஊரடங்கு தளர்வுகள்: நகரப் பேருந்துகளுக்கு மட்டும் அனுமதி?

Lekha Shree

தமிழகத்தில் 3000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

தமிழகத்தில் விளையும் சீனாவின் கருப்பு நிற கேரட்! எப்படி தெரியுமா?

Lekha Shree

மயிலாடுதுறை: பாலியல் தொல்லை கொடுத்ததாக உடற்கல்வி ஆசிரியர் கைது

sathya suganthi

’தமிழ்நாட்டின் சிறந்த பெண் எம்.எல்.ஏ’ விருது பெற்றவருக்கு சீட் கொடுக்காத அதிமுக! ஏமாற்றத்தில் ஆதரவாளர்கள்!

Lekha Shree

ரஜினியை அடுத்து செய்தியாளர்களை சந்திக்கின்றார் கமல்ஹாசன்

Tamil Mint

வைகை அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Tamil Mint

திமுகவில் இணைந்த நடிகர் விமலின் மனைவி…. தேர்தலில் போட்டியிட விருப்பமனு… எந்த தொகுதி தெரியுமா?

Lekha Shree

காங்கிரஸ் பிரமுகர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்

Tamil Mint