’நான் தான் ஜெ.,வின் உண்மையான மகள்’… மைசூர் பெண்ணால் சலசலப்பு..!


கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5, 2016 இல் காலமானார்.

ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதிக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதன்பிறகு, தமிழ்நாடு அரசின் சார்பில் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்காக 2018 இல் எடப்பாடி பழனிசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டு, சுமார் 79 கோடி ரூபாய் செலவில் கடந்த 27.01.2021 அன்று திறக்கப்பட்டது.

ஜெயலலிதா வாழ்ந்தபோதும் சரி, மறைந்த பிறகும் சரி அவரை சுற்றி சர்ச்சைகள் எழாமல் இல்லை. உயிருடன் இருக்கும்போது சொத்துக்குவிப்பு வழக்குகள் அவரை சுற்றி வந்தன, மறைந்த பிறகு வாரிசு பிரச்சனை தலைத்தூக்கின.

Also Read  "உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்" - சசிகலா பரபரப்பு பேட்டி!

இந்த நிலையில், தான் தான் ஜெயலலிதாவின் மகள் என்று கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியைச் சேர்ந்த பிரேமா எனும் பெண் ஒருவர் ஜெயலலிதா நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

தீபாவளி பண்டிகை நாளன்று கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியைச் சேர்ந்த பிரேமா எனும் பெண், ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார்.

அப்போது அவர், தான் ஜெயலலிதாவின் மகள் என்று கூற, இதனை கேட்ட பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவருக்கு அனுமதி மறுத்தனர்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய பிரேமா, “தீபாவளியான இன்று எங்க அம்மாவின் ஆசிர்வாதம் வாங்க வந்தேன்.

Also Read  சூடுபிடிக்கும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை! - கூடுதல் அதிகாரிகள் நியமனம்..!

ஆனால், என்னை உள்ளே விடவில்லை. என்னுடைய சொந்த ஊர் மைசூர். இங்கு பல்லாவரத்தில் தங்கியிருக்கிறேன்.

என்னை வளர்த்த பெற்றோர்கள் இறந்துவிட்டனர். என்னை எல்லாருக்கும் தெரியும். இத்தனை நாட்கள் பிரச்சனைகள் இருந்தது.

அதனால்தான் நான் வெளியில் வரவில்லை. ஒரு நல்ல நாளில் அனைத்து ஆதாரங்களையும் சமர்பிப்பேன்.

எங்க அம்மா அப்பல்லோவில் இருந்தபோது மருத்துவமனையின் பின்புறத்தின் வாயிலாக சென்று என் அம்மாவை முத்து சாமி என்பவரது உதவியுடன் சந்தித்தேன்” என்றார்.

Also Read  அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடம்…!

மேலும் அவரிடம் செய்தியாளர்கள், இவ்வளவு தினங்கள் இல்லாமல் ஏன் இன்று என்று கேள்வி எழுப்பியதற்குப் பதில் அளித்த அவர், “அது சில காரணங்கள் இருக்கு. விரைவில் அனைத்தும் வெளியில் வரும்” என்று தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

முன்னதாக இரண்டு பெண்கள் தாங்கள் தான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி, பின் அவை பொய் என்று நிரூபிக்கப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி ஒரு பெண் உருவெடுத்துள்ளது அதிமுக கூடாரத்தில் சலசலப்பை கிளப்பியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரேஷன் கடைகளில் இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டம் – முதல்வர் தொடங்கி வைத்தார்

Tamil Mint

ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்…!

Lekha Shree

தனியார் பள்ளி கல்வி கட்டணம்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Tamil Mint

நாளை செய்தியாளர் சந்திப்பு: ஓபிஎஸ் சூசகம்

Tamil Mint

எலக்ட்ரானிக் வடிவிலான முதல் பட்ஜெட்… தமிழக சட்டசபையில் இன்று தாக்கல்..!

suma lekha

155 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

வேட்பு மனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள்…!

Devaraj

திமுக எம்பிக்கு கொரோனா !!

Tamil Mint

தமிழ்நாட்டில் முதல் தனியார் ரயில் :

Tamil Mint

முதல்வருக்கு ஸ்டாலின் திடீர் கடிதம்

Tamil Mint

எச்சில் துப்பி தயாரிக்கப்படும் ரஸ்க்… வைரலான வீடியோ… பேக்டரிக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!

Lekha Shree

இது தெரிந்தால் போதும்…. எளிய முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்… நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்….

VIGNESH PERUMAL