ஹிட்லருடன் மோடியை ஒப்பிட்ட முன்னாள் முதல்வர்..!


”ஆபத்து பிரதமருக்கு இல்லை..பிரதமரின் நாற்காலிக்கு தான்” என்று மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய சிங் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு பஞ்சாப் சென்றிருந்த நிலையில் பாதுகாப்பு குளறுபடி காரணமாக பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு டெல்லிக்கு திரும்பி சென்றுவிட்டார். மேலும் டெல்லிக்கு திரும்பி செல்லும் போது பிரதமர் மோடி அங்கிருந்து விமான நிலைய அதிகாரிகளிடம் நான் பஞ்சாபில் இருந்து பதிண்டா விமான நிலையத்திற்கு உயிருடன் வந்தடைந்ததற்கு உங்களுடைய முதல்வருக்கு நன்றி என்று கூறிவிட்டு சென்றுள்ளார். பிரதமர் மோடியின் இந்த வார்த்தை சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Also Read  தோனியின் புகைப்படத்தால் கிளம்பிய சர்ச்சை…!

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜய சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக பிரதமர் மோடியை கிண்டல் செய்து வருகிறார்.

அதில், “நான் உயிருடன் திரும்பி விட்டேன். ஆனால் 700 விவசாயிகளை வீட்டுக்கு உயிருடன் திரும்பி செல்ல நான் விடவில்லை” என்ற கேப்ஷன் போட்டு, மோடி டிராமா பேண்ட் கரோ, திரும்பி போ மோடி என ஹேஷ் டேக் பதிவு செய்துள்ளார்.

Also Read  10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி... எந்த மாநிலத்தில் தெரியுமா?

அதேபோல் மற்றொரு பதிவில் ‘பிரதமருக்கு ஆபத்து இல்லை! பிரதமரின் நாற்காலிக்கு மட்டுமே ஆபத்து!’ என்று கிண்டலாக எழுதி ஹிட்லரும் மோடியும் ஒன்று என்று ஹேஷ் டேக் பதிவிட்டுள்ளார்.

இதனைப்பார்த்த பாஜகவினர் திக்விஜய சிங்கை விமர்சித்து வருகின்றனர்.

Also Read  3 ஆயிரத்தை கடந்த ஒமிக்ரான் பாதிப்பு: பீதியில் மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அனைத்து உதவிகளும் கிடைக்கும்; அசாம் முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி

Jaya Thilagan

பறவை காய்ச்சலுக்கு ரிலையன்ஸ் ஜியோ தான் காரணமா?

Tamil Mint

டெல்லி: ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Tamil Mint

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை இன்று துவக்கம்…!

Lekha Shree

தமிழகத்தில் தேர்தலுக்குப் பிறகு முழு ஊரடங்கா? – சுகாதாரத்துறை கூறுவது என்ன?

Shanmugapriya

நாட்டிற்கே மோடி பெயர் வைக்கும் நிலை வரும் – கொதித்த மம்தா!

HariHara Suthan

வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் வாதங்களில் நியாயமில்லை: பிரதமர்

Tamil Mint

அமேசானில் மாட்டு சாணம் வாங்கி சாப்பிட்ட நபர்? – ட்விட்டரில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் ரிவ்யூ!

Tamil Mint

ஜியோ-கூகுள் கூட்டணியில் விற்பனைக்கு வருகிறது மலிவு விலை ஸ்மார்ட்போன்..!

Lekha Shree

அமேசான் வர்த்தக நிறுவனம் மூலம் கஞ்சா விற்பனை…! 5 பேர் கைது..!

Lekha Shree

‘வாத்தி கம்மிங் ஒத்து!’ – இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமனம்..!

Lekha Shree

“பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியவர்களை சிறையில் அடையுங்கள்!” – ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர்!

Lekha Shree