மாஜி அமைச்சர் மணிகண்டனுக்கு சிறைக்குள் சொகுசு வசதி…! கையும் களவுமாக சிக்கிய பின்னணி..!


சென்னை, பெசன்ட்நகரில் வசித்து வருபவரான நடிகை சாந்தினி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில், மணிகண்டனுடன் தான் 5 ஆண்டுகள் கணவன்-மனைவி போல வாழ்ந்ததாகவும், 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்து, பின்னர் அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்ததாகவும் கூறியிருந்தார்.

Also Read  கொரோனா நிவாரண நிதி: நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நன்கொடை…!

மணிகண்டன் தற்போது தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் நடிகை சாந்தினி புகார் தெரிவித்து இருந்தார்.

இந்த புகார் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை இரண்டு தனிப்படைகள் கைது செய்தன. அமைக்கப்பட்டன.

இதன் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.

Also Read  நடிகையின் பாலியல் புகார் - முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு

இந்நிலையில் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் மணிகண்டனுக்கு செல்போன், ஏ.சி., சோபா உள்ளிட்ட சொகுசு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிறைத்துறை டி.எஸ்.பி. தலைமையில் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் மணிகண்டனுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

Also Read  முன்னாள் அமைச்சர் மணிகண்டன் செல்போனில் ஆபாச வீடியோக்கள்…! வெளியான பகீர் தகவல்கள்…!

இதனால், மணிகண்டன் இன்று புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் மணிகண்டனுக்கு சிறையில் சொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகம்: 11,712 பேர் கொரோனாவிற்கு பலி

Tamil Mint

Cheer4India : ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீர‌ர்களை ஊக்குவிக்க ஹேஷ்டேக்…!

sathya suganthi

அனிதாவை வைத்து நீட் வீடியோ – தான் பதிவிடவில்லை என ஜகா வாங்கிய மாஃபா பாண்டிய ராஜன்…!

Devaraj

இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது – தமிழக தேர்தல் ஆணையம்

Tamil Mint

அ.தி.மு.க. எம்.எல்.ஏ., காரில் கட்டுக்கட்டாக பணம் – ரூ.1 கோடியை பறிமுதல் செய்த பறக்கும் படை…!

Devaraj

தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

Tamil Mint

இந்த விஷயத்தில் அப்பாவை மிஞ்சிய உதயநிதி… என்னன்னு தெரியுமா..?

Ramya Tamil

“தூங்கக்கூட முடியல” – PSBB பள்ளி விவகாரம் குறித்து ட்வீட் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்…!

Lekha Shree

புதுப் படங்கள் வெளியாவதில் சிக்கல்

Tamil Mint

சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் – ஓ.பன்னீர்செல்வம்

Devaraj

உதயநிதி ஸ்டாலின் வருகின்ற தமிழக சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட உள்ளாரா?

Tamil Mint

சட்டமன்றத்தில் திமுகவுக்கு எதிராக புயலைக் கிளப்பப் போகும் கு க செல்வம்?

Tamil Mint