a

“ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது” – சி.வி.சண்முகம்


சமீபத்தில் சசிகலா தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசி வருவதாக வெளியான 2 ஆடியோக்களால் அரசியல் களத்தில் பரபரப்பு உண்டானது.

அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக கூறிய சசிகலா சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததை அடுத்து தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

Also Read  'மக்கள் திலகம்' எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக, அமமுக வினர் மலர் தூவி மரியாதை

மதுரை மாநகர் மாவட்ட, எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ஆரோக்கியராஜ் உடன் சசிகலா பேசியுள்ள ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அதில் அவர் தொண்டர்களை வைத்து தான் தலைவர் தலைவரை வைத்து தொண்டர்கள் இல்லை என சசிகலா கூறியுள்ளார். மேலும், விரைவில் எம்ஜிஆர்-ஜெயலலிதாவைப் போல கட்சியை சீரமைப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read  8 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு!

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலின்போது அதிமுகவுக்கு சாதகமாக சசிகலா செயல்படவில்லை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுகவில் சசிகலா இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், “சசிகலா எந்த நாடகம் போட்டாலும் என்றும் தொண்டர்களால் உருவான அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது.

எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தான் உண்மையான கட்சி என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது” என குறிப்பிட்டார்.

Also Read  மாஸ்க் முறையாக அணியாவிட்டால் ரூ.200 அபராதம்! சென்னை மாநகராட்சி அதிரடி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஸ்டார் வேட்பாளர்கள்: மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடும் கோகுல இந்திரா?

Bhuvaneshwari Velmurugan

கோயிலில் வைத்து பெண்ணுக்கு நடந்த வன்கொடுமை; நாகையில் அதிர்ச்சி சம்பவம்!

Tamil Mint

சசிகலா விடுதலைக்கு பின்னர் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்காது! -மு.க.ஸ்டாலின்

Tamil Mint

தொடரும் அரசு பேருந்து ஊழியர்களின் வேலை நிறுத்தம்! இன்று மாலை முத்தரப்பு பேச்சுவார்த்தை!

Lekha Shree

ஆ.ராசா சர்ச்சை பேச்சு… நழுவுகிறதா திமுக வெற்றி வாய்ப்பு?

Lekha Shree

மாணவி தற்கொலை: ஸ்டாலின் அதிர்ச்சி

Tamil Mint

மரக்காணம்அருகே பழமையான சிலை கண்டெடுப்பு

Tamil Mint

மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

நடிகர் விவேக்கின் கனவுக்கு கைக்கொடுப்போம்… வாருங்கள்…! தமிழ் மின்ட்டின் புது முயற்சி…!

Devaraj

கொரோனா அறிகுறி இருந்தால் குப்புறப்படுக்க வேண்டும் – சென்னை மாநகராட்சி

sathya suganthi

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது?

Tamil Mint

கனமழையால் நிரம்பி வழியும் தமிழக ஏரிகள்

Tamil Mint