a

பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய இடைக்கால தடை!


பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூன் 9-ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமின் கோரிய மனு குறித்த விசாரணையும் ஜூன் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாந்தினி. அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முழு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்தப் புகாரில் மணிகண்டனுடன் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் அவர் திருமணம் செய்து கொள்ள உறுதியளித்து பின்னர் தற்போது மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read  பச்சிளம் குழந்தையின் விரலை துண்டாக்கிய செவிலியர் மீது வழக்குப்பதிவு…!

மேலும் அரசு பங்களாவில் அவருடன் தங்கியதாகவும் அவர் செல்லும் பொது நிகழ்ச்சிகளுக்கு கூடவே சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல் அடித்து மிரட்டியதாகவும் மூன்று முறை கர்ப்பமாக்கி அந்த கருவை கலைத்ததாகவும் சாந்தினி புகார் அளித்துள்ளார்.

அதற்கான ஆதாரங்கள் ஆபாச சில புகைப்படங்களையும் சில வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் களையும் வைத்துள்ள தான் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று மணிகண்டனின் மனைவி நடிகை சாந்தினி மீது புகார் அளித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read  தமிழ்நாடு- ஆந்திரா இடையே பேருந்து போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி

அதைத்தொடர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் சென்னையில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் அவர் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் புகார் அளித்துள்ளதாகவும் சாந்தினி மீது மணிகண்டன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Also Read  "ஜெயலலிதாவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது திமுக… ஆனால் அழுத்தம் கொடுத்தது பாமக தான்" - ஆர்.எஸ். பாரதி

அதைத்தொடர்ந்து தற்போது சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் கோரிய மனு குறித்த விசாரணையும் ஜூன் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூன் 9-ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய தலைப்புச் செய்திகள் | 31.05.2021

sathya suganthi

ஸ்டாலின் மீது வழக்குப் பாய்ந்தது

Tamil Mint

“எனக்கே விபூதி அடிக்க பாக்குறல” மொமெண்ட்… இணையத்தில் வைரலாகும் எச்.ராஜாவின் புகைப்படம்!

Lekha Shree

பாஜகவில் இணையும் கங்குலி? விரைவில் அறிவிப்பு!

Jaya Thilagan

காரீஃப் பருவத்தில் 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது – உணவுத்துறை அமைச்சர் காமராஜ்.

Tamil Mint

நாளை முதல் சென்னை-திருப்பதி இடையே ரயில் சேவை தொடக்கம்

Tamil Mint

மின்தடை புகார்களை வாட்ஸ்-அப்பில் தெரிவிக்கலாம்: உதவி எண் அறிவிப்பு

sathya suganthi

நாட்டிற்கே மோடி பெயர் வைக்கும் நிலை வரும் – கொதித்த மம்தா!

HariHara Suthan

பெரியார் சிலை மீது காவிச் சாயம் வீச்சு: கோவையில் பரபரப்பு

Tamil Mint

சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

Tamil Mint

கேரள அரசு ஊழில் நிறைந்த அரசு: கடுமையாக தாக்கிப் பேசிய ஜே.பி.நட்டா!

Tamil Mint

வழக்கறிஞர்கள் போராட்டங்களில் பங்கேற்க நீதிமன்றம் நிபந்தனை

Tamil Mint