a

ராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட நாடுகள் பட்டியல் – இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?


ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிறுவனம் உலகளாவிய ராணுவ செலவினம் மற்றும் ஆயுத வர்த்தகத்தை குறித்து கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு உலக நாடுகள், ராணுவத்துக்கு எவ்வளவு செலவழித்தன என்பது குறித்து அறிக்கை ஒன்றை ஸ்டாக்ஹோம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Also Read  "மேற்கு வங்கத்தில் ஒற்றைக் காலால் வெல்வேன்" - மம்தா பானர்ஜி

அதில், கடந்த 2020-ம் ஆண்டில் ராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட நாடுகளில் அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

உலக நாடுகளின் ஒட்டுமொத்த ராணுவ செலவில் அமெரிக்காவின் பங்கு 39 சதவீதமாகவும் சீனாவின் பங்கு 13 சதவீதமாகவும் இந்தியாவின் பங்கு 3.7 சதவீதமாகவும் உள்ளது.

Also Read  கொரோனாவை அடுத்து அமெரிக்காவை அச்சுறுத்தும் இயற்கை சீற்றம்!

அமெரிக்கா தனது ராணுவத்துக்கு கடந்த 2020-ல் இந்திய மதிப்பில் ரூ.57 லட்சம் கோடி செலவிட்டுள்ளது. சீனா ரூ.18 லட்சம் கோடி டாலரும் இந்தியா ரூ.5 லட்சம் கோடியும் செலவு செய்துள்ளன. இந்த 3 நாடுகளும் முந்தையை ஆண்டை விட கூடுதலாக ராணுவத்துக்கு செலவிட்டுள்ளன.

உலகில் ராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, இந்தியாவை தொடர்ந்து, ரஷ்யா, பிரிட்டன், சவுதி அரேபியா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.

Also Read  "நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு" - அதிரடி காட்டிய பீட்டர்சன்!

2020-ல் உலக நாடுகளின் மொத்த ராணுவ செலவு முந்தைய ஆண்டை விட 2.6 சதவீதம் அதிகரித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வுச் சுமையை குறைக்கும் தெலங்கானா அரசு!

Tamil Mint

சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்பட 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு…?

Devaraj

ஜேசிபியில் கொண்டு செல்லப்பட்ட மூதாட்டியின் உடல்!

Shanmugapriya

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

Tamil Mint

ஸ்வீட் கேட்டு என்று அழுத குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை! – அதிர்ச்சி சம்பவம்!

Tamil Mint

தமிழகத்தின் அம்மா உணவகத்தைப் போல மேற்கு வங்கத்திலும் குறைவான விலை உணவகங்கள்!

Tamil Mint

கொரோனாவே இல்லாத இந்திய கிராமம்…! வெளியான ஆச்சரிய தகவல்..!

Lekha Shree

விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம்

Tamil Mint

விற்பனைக்கு வந்துள்ள தங்க பீடா! – வைரலாகும் வீடியோ!

Shanmugapriya

இன்றைய கூகுள் டூடுலில் இருப்பவர் யார் தெரியுமா?

Tamil Mint

இந்தியாவில் 45 ஆயிரத்தை கடந்த இறப்பு எண்ணிக்கை

Tamil Mint

இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் – கேரளாவை சேர்ந்த செவிலியர் பலி

sathya suganthi