தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா? – முதல்வர் இன்று ஆலோசனை!


தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மேலும், கொரோனாவின் புதிய திரிபான ஒமைக்ரான் தொற்றின் பரவலும் அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் வகை கொரோனா மீண்டும் உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்ற புதிய வகை தொற்று மிக வேகமாக 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

Also Read  "நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கனும்?" - 'வைகைப்புயல்' வடிவேலு

இந்தியாவில் கடந்த டிசம்பர் 2ம் தேதி ஒமைக்ரான் பாதிப்பு முதன்முதலாக கண்டறியப்பட்டது. ஆனால், அசுர வேகத்தில் பரவ தொடங்கியிருக்கும் ஒமைக்ரான் தொற்றால் இதுவரை இந்தியாவில் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Also Read  தமிழகத்தில் ஒரே நாளில் 1,562 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு.!

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று(ஜன.,10) நடக்கவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்கலாமா ? அதிகரித்து வரும் கொரோனா பரவல் மற்றும் ஒமைக்கரானை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்ன? மேலும் தொற்று பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் என்ன ? என்பது குறித்து விசாரிக்கப்படவுள்ளது.

Also Read  கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை பாதுக்காப்பாக நடத்துவது குறித்தும் தமிழக அரசு ஆலோசிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

காவலர்களின் குடும்பங்களுக்கு உதவிய கமிஷனர்

Tamil Mint

கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: கைதான பள்ளி முதல்வருக்கு நிபந்தனை ஜாமீன்!

suma lekha

புகாரை வாபஸ் வாங்கிக்கொண்ட தஞ்சாவூர் ஒப்பந்ததாரர்கள்: ஈபிஎஸ் காட்டில் மழை

Tamil Mint

‘வலிமை’ படத்தில் அஜித் உபயோகித்த கையுறையை ஏலத்தில் எடுத்த ரசிகர்…!

Lekha Shree

“என்ன ராகவா MP4-ல வந்திருக்கீங்க” – இணையத்தை தெறிக்கும் மீம்ஸ்! #பாலியல்_ஜல்சா_கட்சி

Lekha Shree

கலாய்த்த நியூஸ் வெப்சைட் – தன் பாணியில் பதிலடி கொடுத்த ராதிகா…!

Devaraj

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுகிறதா? – அண்ணாமலை விளக்கம்

Lekha Shree

சென்னை அருகே காவலர் படுகொலை

Tamil Mint

வார இறுதியில் 2 நாட்களுக்கும் மாமிசக் கடைகளுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு

Devaraj

தமிழகத்துக்கு ரூ.3000 கோடி நிதி தேவை – பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

Tamil Mint

கரூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..! மருத்துவர் ரஜினிகாந்த் போக்சோவில் கைது..!

Lekha Shree

தீவிரமடையும் கொரோனா – சென்னையில் ஒரே நாளில் 7,149 பேர் பாதிப்பு!

Lekha Shree