ஐபிஎல்-ஐ தடை செய்ய சொல்லி சமூக வலைத்தளங்களில் கொந்தளிக்கும் ரசிகர்கள்…! என்ன காரணம்?


ஐபிஎல்-ஐ தடை செய்ய வேண்டும் என்றும் இந்தியா இனி எப்படி அரையிறுதி போட்டிக்குள் நுழைய போகிறது என்றும் அரையிறுதிக்குள் நுழைய எதாவது சாத்தியம் இருக்கிறதா? என நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் கடும் கோபத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

ஐபிஎல் நடந்து முடிந்த கையோடு டி20 உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கிவிட்டது. குரூப் பி பிரிவில் உள்ள இந்திய அணி ஏற்கனவே தனது முதல் லீக் ஆட்டத்தில் பரம எதிரி பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்திருந்தது.

இந்த நிலையில், அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்றால் இனி வரும் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியுடன் நேற்று மோதியது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. துபாய் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான போட்டியை போலவே இந்த போட்டியிலும் எதிரணியே ஆதிக்கம் செலுத்தியது.

சர்வதேச போட்டிகளில் கத்துகுட்டியான இஷான் கிஷன் ஆர்வ கோளாறில் ஆடி அவுட்டாக, அடுத்து அவர் போன பாதையிலேயே கே.எல்.ராகுலும் நடையை கட்டினார்.

நிலைத்து நின்றி ஆடி அணியை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் தோள்களின் மேல் விழுந்தது. ஆனால், ரோஹித் ஷர்மா தூக்கியடிக்க பார்த்து கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

Also Read  4-வது டெஸ்ட் போட்டி: இந்திய பவுலர்களின் சூழலில் சுருண்டது இங்கிலாந்து!!!

இவருக்கு பிறகு அடுத்தடுத்து கோலி, ரிஷப் பண்ட் அவுட்டாகினர். எப்போதும் தன்னை ஒரு மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக காட்டிக்கொள்ளும் ஹர்டிக் பாண்டியா இந்த போட்டியில் நிலைத்து ஆடுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏனோ அவரும் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

ஜடேஜா மட்டுமே ஓரளவு அடித்து ஆடி 19 பந்துகளில் 26 ரன்களை சேர்த்தார். இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் ஹர்டிக் பாண்டியா பேட்டிங் செய்த போது சிங்கிள் அடித்து விட்டு ஜடேஜாவிற்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் இவரே ஸ்ட்ரைக்கில் நின்றது ரசிகர்களை எரிச்சலூட்டியது.

இறுதியாக இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களை சேர்த்தது. 111ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணிக்கு 14-வது ஒவரின் 3-வது பந்திலேயே அந்த வெற்றி கிட்டியது.

இந்த தோல்வியால் இந்திய அணியின் அரையிறுதி கனவு கேள்விக்குறியாகியுள்ளது. முக்கியமான இந்த போட்டியில் ஏன் அனுபவம் வாய்த்த வீரரான அஸ்வினை அணியில் தேர்ந்தெடுக்கவில்லை, திடீரென தொடக்க ஆட்டக்காரர்களை ஏன் மாற்றினார்கள் என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளது.

Also Read  ஐசிசி பிப்ரவரி மாத விருது - பரிசீலனை பட்டியலில் இந்திய வீரர் அஷ்வின்!

அதுமட்டுமின்றி இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஆடிய விதம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஐ.பி.எல் போட்டிகளை நடத்தியே தீர வேண்டும். இல்லையெனில் கோடிக்கணக்கிலான வருமானம் பாதிக்கப்படும் என பிசிசிஐ ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து அதனை நடத்தி முடித்து விட்டது.

ஆனால், அதனை தொடர்ந்து முக்கியமான சர்வதேச போட்டி ஒன்றில் இந்திய அணி தற்போது தட்டு தடுமாறி வருகிறது. இதனால் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் இந்திய கிரிக்கெட் வாரியத்தை போட்டு விளாசி வருகின்றனர். இதனால், #BANIPL என்ற ஹேஷ்டேகும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

Also Read  இந்தியா- இங்கிலாந்து 3வது டெஸ்ட் : வெற்றி வாய்ப்பு யாருக்கு?

தற்போது இந்திய அணி தற்போது அரையிறுதிக்கு தகுதி பெறுமா? பெறாதா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தற்போது இரண்டு போட்டிகளில் இந்தியா விளையாடி முடித்துவிட்ட நிலையில், புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான், நமீபியா உள்ளிட்ட அணிகள் இந்தியாவை விட முன்னணியில் உள்ளன.

இதனால், இந்தியாவுக்கு அரையிறுதிக்குள் நுழைய இனி வரும் போட்டிகள் அனைத்திலும் கணிசமான ரன் ரேட்டுடன் வெற்றி பெற்றே ஆக வேண்டும். குறிப்பாக நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் அடுத்து வரும் போட்டிகளில் தலா ஒரு போட்டியில் தோற்க வேண்டும்.

இதிலும் நியூசிலாந்து, இந்திய அணிகளை விட ஆப்கான் அணிக்கே அதிகமான வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர்களின் ரன் ரேட் பெரியளவில் இருப்பதால் பெரிய தலை வலியாக மற்ற அணிகளுக்கு மாறியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கோலாகலமாக தொடங்கிய டோக்கியோ ஒலிம்பிக்ஸ்…!

Lekha Shree

இன்று 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்!

Tamil Mint

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 61,775 பேர் குணமடைந்துள்ளனர்

Tamil Mint

83 முறை ரத்த தானம் செய்த ஆந்திராவை சேர்ந்த நபர்!

Shanmugapriya

சிங்கத்துக்கே கொரோனா : செல்லப்பிராணிகளிடம் இருந்து தள்ளி இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

sathya suganthi

ஜூலை 16ம் தேதி பள்ளிகள் திறப்பு – எங்கு தெரியுமா?

Lekha Shree

மே.வங்கத்தில் இடைத்தேர்தல்.. மமதாவின் முதல்வர் பதவி நீடிக்குமா?

suma lekha

கொரோனா பரவல் – ஊரடங்கு நீட்டிப்பு!

Lekha Shree

இந்தியா: கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 94.22 லட்சத்தை தாண்டியது

Tamil Mint

சச்சின் கவனமாக செயல்பட வேண்டும் – சரத் பவாரின் சூப்பர் அட்வைஸ் இதோ!

Tamil Mint

ஆக்சிஜன் தாருங்கள்…! நன்றியோடு இருப்பேன்…! – அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கமாக கடிதம்

Devaraj

சபரிமலை ஐயப்பன் கோவில் நவம்பர் 16 மீண்டும் திறப்பு

Tamil Mint