கன்னட பவர்ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைவு…! ரசிகர்களின் கண்ணீரால் நிரம்பியுள்ள கண்டீரவா மைதானம்..!


பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கன்னட திரையுலகில் அதிக பட்ச ஊதியம் பெறும் நடிகராக வலம் வந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி புனித் ராஜ்குமார் என் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 46.

Also Read  உடைந்த கையுடன் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடும் நடிகை! வைரல் வீடியோ இதோ..!

பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமார்-பர்வதம்மா தம்பதியின் மகனாக புனித் ராஜ்குமார் ஏராளமான கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து மக்களின் மனம் கவர்ந்த நடிகரானார். அவரை ரசிகர்கள் செல்லமாக அப்பு என அழைப்பர்.

அதற்கு காரணம் அவர் கதாநாயகனாக அறிமுகமான படம் அப்பு. 1975 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் புனித் ராஜ்குமார்.

Also Read  மத ரீதியான சர்ச்சை கருத்து..! மன்னிப்பு கோரிய பாகிஸ்தான் வீரர்..!

1 வயது முதல் 13 வயது வரை கன்னட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பெற்றுள்ளார்.

2002 ஆம் ஆண்டு அப்பு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான புனித் ராஜ்குமார் 29 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஜேம்ஸ் மற்றும் வித்வா ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளராக செயல்பட்டு வந்தார்.

அவரது இறப்பு கன்னட திரையுலகினர் மற்றும் ரசிகர்களை சோக கடலில் மூழ்க வைத்துள்ளது.

Also Read  படப்பிடிப்பில் நடந்த விபரீதம்..! பெண் ஒளிப்பதிவாளர் மரணம்..!

அவரது மறைவிற்கு பல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலை இறுதியாக காண பல ரசிகர்கள் வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த மைதானம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பி வழிகிறது.

அந்த பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூட வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

பெங்களூரு முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. விருப்பப்பட்ட பள்ளிகள் மூடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு நாளை இரவு வரை பெங்களூருவில் மதுபான கடைகள் மூடப்படுகிறது. ராஜ்குமாரின் மகள் அமெரிக்காவில் இருந்து வந்ததும் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அரசு பள்ளி மாணவிக்கு மருத்துவ சீட்டு: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி

Tamil Mint

28 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு வீடு திரும்பிய ஆர்யன் கான்..!

Lekha Shree

பட்டுப்புடவையில் நயன்தாரா, வேட்டி சட்டையில் காதலர் விக்னேஷ் சிவன்… ஃபாரீன் வரை எதிரொலித்த பாரம்பரியம்…!

Tamil Mint

‘சர்தார்’ படத்தில் இணைந்த ‘கர்ணன்’ பட நடிகை…!

Lekha Shree

அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு அறிவிப்பு…!

Lekha Shree

ரூபாய் 10 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை: துணிகர சம்பவம்

Tamil Mint

மணிரத்தினத்தின் ‘நவரசா’ வெளியீட்டு தேதி குறித்த மாஸ் அப்டேட்…!

Lekha Shree

“எம்ஜிஆர் மட்டும் இல்லைனா எங்க குடும்பம் காலி!” – பிக்பாஸ் வருண் உருக்கம்..!

Lekha Shree

100 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தி இந்தியா சாதனை..!

Lekha Shree

நடிகை மீரா மிதுனுக்கு வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!

suma lekha

இதில் கூடவா தமிழகம் முதலிடம்…! பெருமைக்கொள்ளும் விசயம் அல்ல…!

Devaraj

தமிழில் பின்னணி பாடல் பாடும் பிரபல மலையாள நடிகர்…! வைரலாகும் புகைப்படம் இதோ..!

Lekha Shree