ஆர்யன் கானை வரவேற்க போஸ்டர்களுடன் அவரது வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள்..!


பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மும்பை சிறையில் இருந்த 28 நாட்களுக்கு பிறகு இன்று வெளியே வந்துள்ளார்.

அதனால், அவரை வரவேற்க ரசிகர்கள் பலர் போஸ்டர்களுடன் மன்னட் பகுதியில் உள்ள ஷாருக்கானின் வீட்டின் முன் குவிந்தனர்.

Also Read  முல்லை பெரியாறு அணை விவகாரம்..! நடிகர் பிரித்விராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார் ஆர்யன் கான். அவரை கைது செய்த காவல்துறையினர் ஆர்யன் கானை சிறையில் அடைத்தனர்.

இதை அடுத்து ஆர்யன் கான் சார்பில் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு அளிக்கப்பட்டது. இரண்டு முறை அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், கடந்த 28ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கியது மும்பை உயர் நீதிமன்றம்.

Also Read  “சீனாவின் கைப்பாவை.... டிக் டாக் செயலியைப் போல ட்விட்டரும் தடை செய்யப்படும்” - கங்கனா ரனாவத்

ஆனால், அதற்கான ஆவணங்கள் தொலைந்தால் ஆர்யன் கான் சிறையிலிருந்து வெளியே வருவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று அதிகாலை ஆர்தார் ரோடு சிறை அதிகாரிகள் ஜாமீன் பெட்டியில் இருந்து ஜாமீன் ஆவணங்களை எடுத்து ஆர்யன் கான் விடுதலைக்கான செயல்முறையை தொடங்கி வைத்து இன்று காலை 11 மணி அளவில் சிறையிலிருந்து விடுதலை ஆனார் ஆர்யன் கான்.

Also Read  சூர்யா பிறந்தநாளையொட்டி வெளியான 'எதற்கும் துணிந்தவன்' Second look…!

இவரை பிணையில் இருந்து வெளியே கொண்டுவர ஷாருக்கானுடன் ஆரம்ப காலங்களில் கதாநாயகியாக நடித்த ஜூஹி சாவ்லா உதவியுள்ளார்.

ஆர்யன் கானுக்கு பிணை வழங்க நீதிமன்றம் ஒரு லட்ச ரூபாய் ரொக்கத்தை செலுத்துமாறு பணித்துள்ளது. அதை அவர் செலுத்த தவறினால் அதற்கு தான் பொறுப்பு ஏற்பதற்கான உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் ஆஜராகி, உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டுள்ளார் ஜூஹி சாவ்லா.

இதையடுத்து ஆர்யன் கான் மும்பை சிறையில் இருந்த 28 நாட்களுக்கு பிறகு இன்று வெளியே வந்துள்ளார்.

அதனால், அவரை வரவேற்க ரசிகர்கள் பலர் போஸ்டர்களுடன் மன்னட் பகுதியில் உள்ள ஷாருக்கானின் வீட்டின் முன் குவிந்தனர். இப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மனநலம் பாதித்த பெண்ணை குழந்தை திருட வந்தவர் என தாக்கிய பொதுமக்கள்..!

Lekha Shree

மருத்துவர்கள் கடவுளின் தூதுவர்கள் – பாபா ராம்தேவ்

Shanmugapriya

“சிவசங்கர் பாபாவை கைது செய்து தூக்கிலிடுங்கள்” – பிரபல நடிகை ட்வீட்

Shanmugapriya

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ள தனுஷின் ‘அசுரன்’…!

Lekha Shree

சன் டிவியின் புதிய சீரியல்! அட இவங்க நடிக்கிறாங்களா? எகிரும் எதிர்பார்ப்புக்கள்…

HariHara Suthan

டீசருக்கு டீசர் வெளியிட்டுள்ள ‘கேஜிஎப் 2’ படக்குழுவினர்…!

Lekha Shree

“விவாகரத்து மனவலிகள் நிறைந்தது!” – பிரிவிற்கு பின் சமந்தாவின் முதல் பதிவு..!

Lekha Shree

விபத்தில் சிக்கிய பிரபல தெலுங்கு நடிகர்.. மருத்துவமனையில் அனுமதி..!

suma lekha

ஆக்சிஜன் தட்டுப்பாடு…. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் நிதியுதவி..!

Lekha Shree

சிபிஎஸ்இ தேர்வு தேதிகள் மாற்றம்… புதிய அட்டவணை வெளியீடு!

Lekha Shree

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி

Devaraj

நயன்தாரா நடிக்கும் ‘கனெக்ட்’ – ஹாரர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு..!

Lekha Shree