டெல்லியில் போராடும் விவசாயிகளின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கம்!


டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தொடங்கிய கிசான் ஏக்தா மோர்ச்சா என்ற முகநூல் பக்கத்தை அந்நிறுவனம் முடங்கியுள்ளது. இந்த செய்தி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநில விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  

இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, நவம்பர் 26ம் தேதி முதல், டெல்லி, பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர். 

மத்திய அரசு நடத்திய  பேச்சுவார்த்தைகளில் எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஆரம்பித்த கிசான் ஏக்தா மோர்ச்சா என்ற முகநூல் பக்கம் முடக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கமும் முடக்கப்பட்டது. இந்த தளங்கள் வழியாக போராட்டக்களத்தில் நடக்கும் தகவல்களை அனைத்து தரப்பினரும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிந்தது.

Also Read  ஏடிஎம்மில் ஐந்து ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணமா?

நேற்று நடந்த போராட்டத்தை முகநூலில் நேரலையாக வெளியிட்டனர். திங்கட்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் விவசாயிகள் ஈடுபடுவார்கள் என்றும், அதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்பார்கள் என்றும் விவசாய சங்க தலைவர் ஒருவர் கூறினார். 

அதன் பிறகே அவர்களின் சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகள்  மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அதனை அடுத்து முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன. 

Also Read  வந்தே பாரத் திட்டத்தின் கீழ், 32 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்: அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக முகநூல் நிறுவனம் சார்பாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அப்பக்கம் ஏன் அகற்றப்பட்டது என்பதற்கான தெளிவான காரணம் தெரிவிக்கப்படவில்லை.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவை குணப்படுத்தும் கத்தரிக்காய் லேகியம் – ஆந்திர அரசு அனுமதி

sathya suganthi

“அமித் ஷா பதவி விலக வேண்டும்… மோடிக்கு எதிராக விசாரணை வேண்டும்” – ராகுல் காந்தி

Lekha Shree

“நதிகளில் சடலங்கள் மிதந்த மாநிலம் சிறந்த மாநிலமா?” – மம்தா பானர்ஜி

Lekha Shree

மறுபடியும் மொத இருந்தா! மீண்டும் அச்சுறுத்துமா நோய் தொற்று…

Jaya Thilagan

வரி ஏய்ப்பு செய்தாரா பாலிவுட் நடிகர் சோனு சூட்?

Lekha Shree

சசிகலா கிட்ட இருந்து என்னோட சொத்தை மீட்டு கொடுங்க: கோரிக்கை வைக்கும் கங்கை அமரன்.!

mani maran

காதலர் தின பரிசாக மனைவிக்கு சிறுநீரகத்தை தானமாக அளிக்க முடிவு செய்த கணவர்!

Tamil Mint

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தொடங்கியது! கேரளாவில் தீவிரமாக பரவும் வைரஸ்!

Lekha Shree

மனைவியிடத்தில் கணவன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது குற்றம் என்று அழைக்க முடியுமா? – நீதிபதியின் சர்ச்சை கருத்து!

Shanmugapriya

#JusticeForChaitra… பாலியல் வன்கொடுமைக்கு ஆளக்கப்பட்டு 6 வயது சிறுமி கொலை.. ஹைதராபாத்தில் கொடூரம்..!

suma lekha

அபாயகரமான கொரோனா வகை…! 174 மாவட்டங்களில் கண்டுபிடிப்பு…!

sathya suganthi

ட்விட்டருக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு! காரணம் இதுதான்…

Tamil Mint