விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் பின்னணி உள்ளது: மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் சர்ச்சைக் கருத்து


இந்திய நுகர்வோர் துறை அமைச்சர் ராவ்சாஹேப் தன்வே, “டெல்லியிலும் பிற மாநிலங்களிலும் நடந்து வரும் விவசாயிகளின் போராட்ட பின்னணயில் பாகிஸ்தானும், சீனாவும் இருந்து கொண்டு தூண்டி விடுகிறது” என்ற சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜல்னா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியவர், “தற்போது நடந்து வரும் போராட்டம் விவசாயிகளுடையதே இல்லை. சீனாவும், பாகிஸ்தானும் அதன் பின்ணயில் உள்ளன. முதலில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை அவை தூண்டி விட்டன. தேசிய குடியுரிமை பதிவேடு வருகிறது, குடிமக்கள் திருத்த சட்டம் வருகிறது, அதனால் முஸ்லிம்கள் நாட்டை விட்டு ஆறு மாதங்களில் வெளியேற வேண்டும் என பீதியை கிளப்பின. ஆனால், அப்படியேதேனும் நடந்ததா?” என்று கேள்வி எழுப்பினார்.

Also Read  தெற்காசிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் 3 மடங்கு உயர வாய்ப்பு! - அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்!

தொடர்ந்து பேசிய அவர், “இதுபோன்ற முயற்சிகள் எல்லாம் பலன் கொடுக்காது. இந்த போராட்டங்களால் விவசாயிகளுக்கே பாதகமாக நேரிடும். இது மற்ற நாடுகளின் சதி” என்று கூறினார். 

அவர் பேசிய காட்சிகள் தொலைக்காட்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் வெளியானது. அதை தொடர்ந்து பல விவசாயிகளும் விவசாய சங்கத்தை சேர்ந்தவர்களும், “உணர்வுப்பூர்வமிக்க விவசாயிகள் போராட்டத்தை இப்படியா கொச்சைப்படுத்துவார் ஒரு மத்திய அமைச்சர்” என்று கடுமையாக சாடியுள்ளனர்.

Also Read  மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா! அலறும் மாநில அரசுகள்! முழு விவரம்!

“எந்த பிரச்னைக்கு யார், யாரையெல்லாம் இந்த மத்திய அமைச்சர் இழுக்கிறார்” என்று மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா அரசின் அமைச்சர் பச்சு காடூ விமர்சித்துள்ளார். 

“ஒரு மத்திய அமைச்சரே விவசாயிகள் போராட்டத்தில் அண்டை நாடுகளின் பின்னணி இருப்பதாக கூறுகிறார் என்றால் அந்த தகவல் உண்மை என்றால் அந்த நாடுகள் மீது ஒரு சர்ஜிக்கல் தாக்குதலை பாதுகாப்பு அமைச்சர் நடத்த உத்தரவிட வேண்டும்” என்று சிவசேனா கட்சியின் எம்.பி சஞ்சய் ரெளட் கூறியுள்ளார்.

Also Read  "இதனை சாப்பிட பயன்படுத்தலாம்" - பெற்றோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஸ்லேட் பென்சில் விளம்பரம்!

இந்தியாவின் மத்திய அமைச்சரே விவசாயகள் போராட்டத்தை பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் தொடர்புபடுத்தி பேசியிருப்பது சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘ரெட் அலர்ட்’ – வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!

Lekha Shree

பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய அதிரடி ரீசார்ஜ் ஆஃபர்! வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

Lekha Shree

“நதிகளில் சடலங்கள் மிதந்த மாநிலம் சிறந்த மாநிலமா?” – மம்தா பானர்ஜி

Lekha Shree

“நன்றி… சகோதரரே..” வாழ்த்து தெரிவித்த ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் ட்வீட்…

Ramya Tamil

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு, அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

Tamil Mint

பீகாரின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி உறுதி செய்யப்படும்: பிரதமர்

Tamil Mint

டெல்லியில் ஜெனரேட்டர்களுக்கு தடை

Tamil Mint

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி…!

sathya suganthi

மே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படும் – மத்திய அரசு

Lekha Shree

ஐரோப்ப நாடுகளுக்கு கோரிக்கை விடுத்த மத்திய அரசு…என்ன காரணம் தெரியுமா?

Lekha Shree

ஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின் வியூகம் தொடர்ந்து கைக்கொடுக்குமா?

sathya suganthi

இந்தியா முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்… கொரோனா அறிகுறியுள்ள குழந்தைகளுக்கு எச்சரிக்கை!

Tamil Mint