புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு, அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி


தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. அதில் போதிய இடவசதியும் இல்லை. எனவே, புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய கட்டிடத்துக்கு அருகிலேயே புதிய கட்டிடம் எழுப்பப்படுகிறது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கட்டுமான பணிக்கு தடை விதித்தது. இருப்பினும், பூமி பூஜை நடத்தலாம் என்று அனுமதி அளித்தது.

Also Read  காதலர் தின பரிசாக மனைவிக்கு சிறுநீரகத்தை தானமாக அளிக்க முடிவு செய்த கணவர்!

அதன்படி, டெல்லியில் புதிதாக அமைய உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி இன்று  அடிக்கல் நாட்டினார் என்று செய்தி  நிறுவனமான ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. 

தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் தொல்லியல் சொத்தாக பராமரிக்கப்படும். நாடாளுமன்றம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்த பயன்படுத்தப்படும்.

டாடா நிறுவனம், புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளை மேற்கொள்கிறது. 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படுகிறது. நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரமாண்ட அரசியல் சட்ட அரங்கம் மற்றும் எம்.பி.க்கள் ஓய்வு எடுக்கும் பகுதி, நூலகம், நிலைக்குழுக்களின் அறைகள், சாப்பிடும் பகுதி, வாகன நிறுத்துமிடம் ஆகியவை இடம்பெற்று இருக்கும்.

Also Read  310 கி.மீ நீள நீர்வழித்தடத்தில் சூரியசக்தி படகில் பயணம் செய்த முதல்வர்!

மக்களவையில் 888 இருக்கை வசதிகளும், மாநிலங்களவையில் 384 இருக்கை வசதிகளும் இருக்கும். நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தின்போது, மக்களவையில் 1,224 பேரை அமர வைப்பதற்கான வசதிகள் இடம்பெற்று இருக்கும். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மே மாதத்தில் 38 – 48 லட்சத்தை தொடும்..!

Lekha Shree

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி: ஆளுநர் கிரண்பேடி எதிர்ப்பு

Tamil Mint

18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு

Devaraj

சென்னை-பெங்களூர் இடையே டபுள் டெக்கர் ரயில்

Tamil Mint

இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா…! 3வது அலையின் தொடக்கமா?

Lekha Shree

தாஜ்மஹாலை இழுத்து மூடிய காவல்துறை…

Devaraj

மாட்டு சாணம் சிகிச்சை.. இந்த கொடிய தொற்று ஏற்படலாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

Ramya Tamil

அதிதீவிர புயலாக உருவெடுக்கும் ‘யாஸ்’…!

Lekha Shree

மணிக்கு 85 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

Ramya Tamil

மீண்டும் களத்தில் குதித்த ராகுல் காந்தி! கேரளாவில் செய்த சூப்பர் விஷயம் இதோ!

Devaraj

பெங்களூரு-ஜோலார்பேட்டை இடையே மீண்டும் மெமு ரெயில் சேவை தொடக்கம்: தென்மேற்கு ரெயில்வே அறிவிப்பு

Tamil Mint

பேய்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ்…! விவசாயி கொடுத்த வினோதப் புகார்…!

sathya suganthi