‘அமைதியான’ நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்


வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் இந்த போராட்டம் இன்று 12-வது நாளாக தொடர்கிறது.  நாளை விவசாயிகள் நாடு முழுவதும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.

விவசாயிகள் போராட்டத்திற்கு திரிணாமுல் காங்கிரஸைத் தவிர அனைத்து எதிர்க்கட்சிகளும் – சிவசேனா, காங்கிரஸ், தி.மு.க, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், ராஷ்டீரிய ஜனதா தளம்,  சமாஜ்வாதி கட்சி, தேசிய வாத காங்கிரஸ்  ஆம் ஆத்மி கட்சி, ஜம்மு காஷ்மீரில்  குப்கர் பிரகடனத்திற்கான புதிதாக உருவாக்கப்பட்ட மக்கள் கூட்டணி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

Also Read  இந்தியா முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்... கொரோனா அறிகுறியுள்ள குழந்தைகளுக்கு எச்சரிக்கை!

நாளைய  முழு கடையடைப்பு போராட்டத்திற்கு  தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆதரவு அதிகரித்து வருவதால், பழங்கள் மற்றும் காய்கறிகளை வழங்குவது உள்பட சில சேவைகள் டெல்லியில் பாதிக்கப்படக்கூடும்.

இந்தியாவின் அனைத்து மோட்டார் போக்குவரத்து தொழிற்சங்கங்களும் விவசாயிகளின்  போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. இதனால் பல  மாநிலங்களில்  லாரிகள் இயங்குவது பாதிக்கப்படலாம். 

Also Read  பிரியாமல் இருக்க இரட்டை சகோதரிகள் எடுத்த விபரீத முடிவு - வேதனையில் பெற்றோர்கள்...!

ஆசியாவின் மிகப்பெரிய மொத்த சந்தையான ஆசாத்பூர் மண்டியின் தலைவர் ஆதில் அகமது கான் கூறும் போது டெல்லியில், பழங்கள் மற்றும் காய்கறிகள் குறைவாகவே இருக்கும். எங்கள் வர்த்தகர்களில் பெரும்பாலோர் முழு கடையடைப்பு  அழைப்பை ஆதரிக்கின்றனர். எனவே, காசிப்பூர், ஓக்லா மற்றும் நரேலாவில் உள்ள மண்டிகள் பெரிதும் பாதிக்கப்படும்” என்று  கூறினார்.

பஞ்சாபில் முழு கடையடைப்புக்கு முழு ஆதரவு தெரிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தெலுங்கானா மற்றும் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா மற்றும் அசாமில் உள்ளிருப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. இது போக்குவரத்து நெரிசல்களை உருவாக்க வாய்ப்புள்ளது. 

Also Read  பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி

‘அமைதியான’ நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம்  காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும், அவசர சேவைகள் எதுவும் பாதிக்கப்படாது என போராட்டம் நடத்தும்  விவசாய அமைப்புகள் கூறி உள்ளன.

 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முற்றுப்புள்ளி இன்றி தொடரும் கள்ளச்சாராய பலிகள் – மத்திய பிரதேசத்தில் 4 பேர் உயிரிழப்பு

Tamil Mint

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்! பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை

Tamil Mint

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என ஆய்வில் தகவல்!

Tamil Mint

கர்நாடகாவை உலுக்கிய கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம்..! தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது..!

Lekha Shree

மேற்கு வங்கத்திலிருந்து திரிணமுல் காங்கிரசை வேரோடு அகற்ற வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Tamil Mint

சிவனின் கையில் மதுபானம்… சர்ச்சையை கிளப்பிய இன்ஸ்டாகிராம்..!

Lekha Shree

15 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த குட்டி யானை மீட்பு! – வீடியோ

Shanmugapriya

விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைப்படியே வேளாண் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது – பிரதமர்

Tamil Mint

மேற்கு வங்கத்தில் சாவர்க்கர் குறித்த சர்ச்சை கேள்வி… கொதித்தெழுந்த பாஜக…! என்ன நடந்தது?

Lekha Shree

உத்தரப்பிரதேசத்தில் 2 பேருக்கு கப்பா வைரஸ் தொற்று உறுதி…!

Lekha Shree

டோக்கியோ பாராலிம்பிக்: துப்பாக்கிச் சுடுதலில் 2-வது பதக்கம் வென்றார் இந்தியாவின் அவனி லெகாரா..!

Lekha Shree

மக்களே உஷார்: போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் விற்பனை – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

suma lekha