நாளைய பாரத் பந்த் வெற்றி பெறாது என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்


 மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், அச்சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வடமாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு இன்று 12வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால், டெல்லி எல்லைப்பகுதியில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

Also Read  அதிமுக வழிகாட்டுதல் குழு அறிவிப்பு

விவசாயிகள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது வீதிகளிலும், சாலைகளிலும் கூடாரம் அமைத்து இரவுபகலாக அங்கேயே சமைத்து போராடி வருகின்றனர்.இதுவரை விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 5 சுற்றுப் பேச்சுவார்த்தை முடிந்தபோதிலும், எந்தவிதமான சுமூகமான தீர்வும் எட்டப்படவில்லை. 4ம் கட்ட பேச்சுவார்த்தை முடிந்தபோது, வேளாண் சட்டம் ரத்து தொடர்பாக மத்திய அரசுடன் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது.

Also Read  மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை

அந்தவகையில் நாளை (டிச. 8) நாடு தழுவிய முழு அடைப்புக்கு (பாரத் பந்த்) விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்தது. 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி, விவசாயிகள் அழைப்பு விடுத்த பாரத் பந்த்தை குஜராத் ஆதரிக்கவில்லை. கடைகளையும் பிற நிறுவனங்களையும் யாராவது வலுக்கட்டாயமாக மூட முயன்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Also Read  கோவையில் கடைகள் இயங்க நேரக் கட்டுப்பாடு : மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிளஸ் 2 சிறப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? அமைச்சர் தகவல்

Tamil Mint

திமுக தோழமை கட்சிகள் கூட்டம் தொடங்கியது

Tamil Mint

கொரோனா பரிசோதனைக்கு புதிய கட்டண முறை அறிவிப்பு!

Lekha Shree

கொரோனா தடுப்பு பரிசோதனையில் பங்கு பெற விருப்பமா?

Tamil Mint

சட்டப்படியான வாக்குகளை எண்ணினால் நானே வெற்றி பெறுவேன்: டிரம்ப் பிடிவாதம்

Tamil Mint

முழு ஊரடங்கான இன்று கொரோனா நிவாரண நிதி ரூ.2000 விநியோகம் உண்டா?

sathya suganthi

இன்று பிரதோஷம்: ஆன்லைன் மூலம் சிவ தரிசனம் செய்யலாம்

Tamil Mint

எதிர்பார்ப்பு இல்லாத அன்பு எப்போதும் இருக்கும்.! வாழு வாழ விடு: தல அஜீத் அதிரடி அறிக்கை

mani maran

தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா: சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு!

Lekha Shree

தமிழகத்தில் பள்ளி, தியேட்டர் திறப்பு? – முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை..!

Lekha Shree

உதயநிதியை எதிர்த்து போராட்டம்

Tamil Mint

தேதி குறித்து கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் செய்தால் கடும் நடவடிக்கை – மா.சுப்பிரமணியன்

sathya suganthi