டிசம்பர் 14 ஆம் தேதி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!


டெல்லி விவசாயிகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தனர்.

அதன்படி, டிசம்பர் 14-ம் தேதி ஒரு நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாக விவசாய தலைவர்கள் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமில்லாமல், ஜெய்பூர் – டெல்லி நெடுஞ்சாலையில் விவசாயிகள் டெல்லி சலோ போராட்டத்தை மேற்கொள்ளப்போவதாகவும், ஞாயிற்றுக்கிழமை 11 மணிக்கு விவசாயிகள் ஷஹஜன்பூரில் இருந்து பயணத்தைத் தொடங்குவார்கள் என்றும் விவசாய தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

“அரசாங்கம் மீண்டும் பேச விரும்பினால் நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், முதலில் அந்த மூன்று சட்டங்களை திரும்பிப் பெறுவது குறித்து விவாதிக்கவேண்டும்” என விவசாய  தலைவர்கள் தெரிவித்தனர்.

Also Read  கடன் தவணைத் தொகையை திரும்ப செலுத்த 2 ஆண்டுகள் வரை கூட அவகாசம் கொடுக்க இயலும் - மத்திய அரசு.

இதனிடையே மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்த ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலா, அடுத்த 20 முதல் 40 மணி நேரத்தில் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

அதையடுத்து, “விவசாயிகள் போராட்டத்தை நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஊடுருவி வழிநடத்தாவிட்டால் அவர்கள் புதிய விவசாய சட்டங்களால் அவர்களுக்கு நன்மை உண்டு என்பதை ஏற்பார்கள்” என்று ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் கூறியுள்ளார்.

Also Read  "கர்நாடகாவில் ஊரடங்கு கிடையாது " - எடியூரப்பா திட்டவட்டம்!

மேலும் “பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசின் கதவுகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும்” எனவும் அவர் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய தலைப்புச் செய்திகள் | 20.5.2021

sathya suganthi

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதில் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Lekha Shree

நாட்டில் 60 கோடி மக்கள் குடிநீர் பிரச்சினையால் பாதிப்பு – கருத்தரங்கில் தகவல்

Devaraj

இமாச்சலப் பிரதேசத்தில் முதன்முறையாக மிகப்பெரிய ராஜநாகம்…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பதிவை நீக்கிய ட்விட்டர்! காரணம் என்ன?

Lekha Shree

ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்!

Lekha Shree

இந்திய அணியை தட்டி தூக்கினா பரிசு மழை: உற்சாகத்தில் பாக். அணி வீரர்கள்.!

mani maran

உணவுப் பட்டியலில் இருந்து கோழிக்கறியை நீக்க முடிவு! எங்கு தெரியுமா?

Lekha Shree

சோனு சூட்டுக்கு ஐநா விருது

Tamil Mint

கொரோனா இல்லாத கிராமத்திற்கு ரூ.50 லட்சம் பரிசு…! எங்கு தெரியுமா?

Lekha Shree

“வீட்டிற்குள்ளும் இந்தியர்கள் முகக் கவசம் அணிய வேண்டும்” -அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் எச்சரிக்கை!

Shanmugapriya

ஒன்றல்ல…இரண்டு கின்னஸ் சாதனை புரிந்த இந்திய ராணுவ வீரர்…! என்ன சாதனை தெரியுமா…?

Devaraj