வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது- மத்திய அரசு


மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டில்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு மாநில விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  

இந்த போராட்டத்திற்கு சுமூக தீர்வு காணும் வகையில், மத்திய அரசு 5 சுற்றுகளாக விவசாய தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் எந்த சுமூகமான முடிவும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து பேச்சுவார்த்தை 9-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.

Also Read  இந்தியாவில் 24 மணிநேரத்தில் 18,522 பேருக்கு கொரோனா-418 பேர் பலி- தமிழகம் மீண்டும் 2-வது இடம்

இது குறித்து, அனைத்திந்திய விவசாய சங்கத்தின் பொது செயலாளர் ஹன்னன் மொல்லா, “விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையேடிசம்பர் 9 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறாது. விவசாய தலைவர்களிடம் அரசின் முன்மொழிவு ஒன்று வழங்கப்படும் என எங்களிடம் மத்திய அமைச்சர் கூறினார்.

அரசின் முன்மொழிவை பற்றி விவசாய தலைவர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்துவார்கள். மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற தயாராக இல்லை. டில்லி மற்றும் ஹரியானாவின் சிங்கு எல்லை பகுதியில் பகல் 12 மணியளவில் விவசாயிகளிடையே ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்” என கூறினார்.

Also Read  4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிறை… பெண் விவசாயி தொடர்ந்த வழக்கில் வெற்றி..!

இந்த நிலையில், “வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதென்பது இயலாதது. வேளாண் சட்டங்களில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ள பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம்” என வரைவு அறிக்கை ஒன்றை விவசாய சங்கங்களுக்கு அனுப்பியது மத்திய அரசு. 

ஆனால், “மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை”  என விவசாய சங்கங்கள் தெரிவிக்கின்றனர்.

Also Read  ஜேசிபியில் கொண்டு செல்லப்பட்ட மூதாட்டியின் உடல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அடுத்தடுத்து 2 தடுப்பூசிகள் செலுத்திய செவிலியர்கள்… இளம்பெண் மருத்துவமனையில் அனுமதி..!

suma lekha

தமிழகத்தை உளவு பார்க்கும் இலங்கை! ராஜபக்சவின் ஸ்பெஷல் அசைன்மென்ட்..!

Lekha Shree

அமித்ஷா வருகையால் சென்னையில் போக்குவரத்து நெரிசல்

Tamil Mint

கொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்தினால் என்னவாகும்?

Lekha Shree

கொரோனா புதிய உச்சம் – இந்தியாவில் ஒரே நாளில் 3,980 பேர் உயிரிழப்பு…!

Lekha Shree

வைரஸ் தடுப்பில் N95 மாஸ்க் பயன் தராதா எயிம்ஸ் டாக்டர் கடிதத்தால் புதிய சர்ச்சை!

Tamil Mint

வீரியம் எடுக்கும் கொரோனா – தெலங்கானாவில் இரவு நேர ஊரடங்கு..!

Lekha Shree

மக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ள உலக அதிசயத்தின் கதவுகள்…!

Lekha Shree

12 மாம்பழங்களை 1.2 லட்ச ரூபாய்க்கு வாங்கிய தொழிலதிபர்… காரணம் இதுதான்..!

Lekha Shree

இந்திய மகளிர் ஹாக்கி அணி பதக்கம் வென்றால் பரிசு! – வைர வியாபாரியின் அதிரடி அறிவிப்பு!

Lekha Shree

‘அப்போது விஸ்மயா இப்போது சுனிஷா’ – கேரளாவில் தொடரும் தற்கொலைகள்… பதறவைக்கும் ஆடியோ வெளியீடு..!

Lekha Shree

ஜெய்ப்பூர்: வெளியான நீட் தேர்வு வினாத்தாள்… மோசடியில் ஈடுபட்ட மாணவி உட்பட 8 பேர் கைது…!

Lekha Shree