விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம்


வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை உடனடியாக அகற்ற உத்தரவிடக் கோரிய பொதுநல மனுக்களை உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. 

அப்போது நீதிபதிகள், “மத்திய அரசு நடத்தி வரும் பேச்சுவார்த்தை பலன் அளிக்கவில்லையா? விவசாயிகள் அமைப்புகள் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பவர்களின் பெயர்களை தெரிவியுங்கள். ஏனெனில் மத்திய அரசின் பேச்சு வார்த்தை பலனளிக்கவில்லை என்றால் நாடு முழுவதும் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள் அடங்கிய குழுவை நாங்கள் அமைக்கிறோம். இல்லையென்றால் விரைவில் இது நாடு தழுவிய பிரச்சினையாக மாறிவிட கூடும்” என தெரிவித்தனர்.

Also Read  ஏப்ரல் 11 முதல் 14 வரை 'தடுப்பூசி திருவிழா' - மத்திய அரசு திட்டம்!

மேலும் இந்த பொதுநல வழக்கின் விசாரணை இன்றும் தொடர்ந்தது.

அந்த விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, “வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது தற்போதைக்கு முடிவெடுக்க போவதில்லை. விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்தி முடிவு எடுக்கப்படும். விவசாயிகளின் போராட்டம்  மற்றும் குடிமக்கள் அடிப்படை உரிமை குறித்து மட்டுமே இன்று தீர்மானம் எடுக்கப்படும்.

Also Read  காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் எதிர்கட்சிகள் வெற்றி பெற வாய்ப்பு!

விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது ஆனால்  குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க நினைக்கிறோம். ஒரு போராட்டம்  என்பது சொத்துக்களை அழிக்கவோ அல்லது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கவோ செய்யக் கூடாது. மத்திய அரசும்  விவசாயிகளும் பேச்சுவார்த்தை நடத்த  வேண்டும். 

விவசாயிகள் நோக்கத்தை பேச்சுவார்த்தை  மூலம் நிறைவேற்ற முடியும். போராட்டத்தில் அமர்ந்திருப்பது உதவாது . விவசாயிகள் வன்முறையைத் தூண்டக் கூடாது” என தெரிவித்தார்.

Also Read  ‘பெட்ரோல் விலை உயரக் கூடாது என்றால் மோடிக்கு வாக்களிக்காதீர்கள்’ - இணையத்தில் வைரலாகும் பில் உண்மையா? #FactCheck

மேலும், பி சாய்நாத், பாரதிய கிசான் யூனியன் மற்றும் பிறரை உறுப்பினர்களாக சேர்த்து கொள்ளலாம் என்றும்  வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்த கோரிய மனுக்களை விடுமுறைகால அமர்வு விசாரிக்கும் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

காதலர் தினத்தையொட்டி வாட்ஸ் அப்பில் வலம் வரும் சூப்பர் ஆப்பர்…!

Tamil Mint

சிறையில் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்… சிறுநீரக கோளாறு என வெளியான தகவலுக்கு சசிகலா மறுப்பு

Tamil Mint

கொரோனா 2ம் அலை – குப்பை வண்டிகளில் சடலங்கள் ஏற்றி செல்லப்படும் அவலம்…!

Lekha Shree

கணவர் கண் முன்னே 19 வயது மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்! – அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya

2021-22 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம்!

Tamil Mint

செல்போன் தகவல்களை திருடும் “ஜோக்கர் வைரஸ்” – இந்த Appக்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை…!

sathya suganthi

83 முறை ரத்த தானம் செய்த ஆந்திராவை சேர்ந்த நபர்!

Shanmugapriya

இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? – சுப்ரமணியன் சுவாமி சாடல்

Tamil Mint

டோக்கியோ பாராலிம்பிக்: துப்பாக்கிச் சுடுதலில் 2-வது பதக்கம் வென்றார் இந்தியாவின் அவனி லெகாரா..!

Lekha Shree

இந்தியாவில் மேலும் 76,472 பேருக்கு தொற்று, ஒரே நாளில் 65 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

Tamil Mint

அரையிறுதியில் பி.வி. சிந்து.! பதக்கத்தை உறுதி செய்த சிங்கப்பெண்.

mani maran

விவசாயிகள் போராட்டத்தில் உ.பி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு அனுமதி மறுப்பு

Tamil Mint