போராட்டம் முடியும்வரை டெல்லியிலே இருப்போம்: தமிழ்நாட்டு விவசாய சங்கத்தினர்


தமிழகத்தில் இருந்து விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த சிலர் ரயில் மூலம் டெல்லி சென்று விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

சுமார் 10 தமிழர்கள் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் தற்போது பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

“நாங்கள் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் சங்கத்தைச் சேர்ந்த இரண்டு நிர்வாகிகள் மற்றும் எங்கள் அமைப்பைச் சேர்ந்த  6 பேர் தனியாக வந்து போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளோம். எங்களுக்கு பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் போராட்டக் குழுவினர், உணவு, தங்குவதற்கும், குளிப்பதற்குமான இடங்களைத் தந்து சகோதரத்துவத்துடன் இணைத்துக்கொண்டனர்” என அச்சங்கத் தலைவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “போராட்டம் முடியும்வரை இங்கேயே இருப்போம்” என்றும் கூறினார்.

Also Read  இன்றைய கூகுள் டூடுலில் இருப்பவர் யார் தெரியுமா?

கடன் தள்ளுபடி, விளை பொருள்களுக்கு லாபகரமான விலை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் கடந்த காலங்களில் டெல்லியில் நடத்திய சிறிய போராட்டங்கள் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள்: அறிவாலயத்தில் அவசர ஆலோசனை

Tamil Mint

தமிழ்நாடு: 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!

Lekha Shree

தேர்தலில் வெற்றி பெற நம் சாதனைகளில் கவனம் செலுத்துங்கள்: இ.பி.எஸ்

Tamil Mint

அம்மா – அப்பா எல்லாம் இல்லை… ஜெயலலிதா மோடிக்கு புதிய உறவுமுறை கொடுத்த சி.டி.ரவி!

Devaraj

“பழிவாங்கும் நோக்கத்தில் சோதனை நடத்தப்படுகிறது” – ஜெயக்குமார் ஆவேசம்!

Lekha Shree

கோர தாண்டவமாடும் கொரோனா…! முதன்முறையாக 2 லட்சத்தை கடந்த ஒரு நாள் பாதிப்பு…! முழு விவரம்…!

Devaraj

கொரோனா தளர்வுகளால் களைகட்டும் மணாலி… சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் வீதிகள்..!

Lekha Shree

தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடு – சுகாதாரத்துறை செயலாளர்

Devaraj

மகாராஷ்டிரா மாநிலத்தில் தீவிரமடையும் கொரோனா…! இதுதான் காரணமா…?

Devaraj

கொலைக்கார கொரோனா – இந்தியாவில் ஒரே நாளில் 3645 பேர் பலி…!

Devaraj

இன்றைய தலைப்புச் செய்திகள் | 10.5.21

sathya suganthi

நாளை நாடு முழுவதும் மீலாதுன் நபி திருநாள் கொண்டாட்டம்

Tamil Mint